பக்கம்:சிதறல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 எத்தனையோ இரவுகள் அவர்களுக்குப் பகலாகக் கழிந்தது என்று அந்த நாவலை முடித்தேன். அதை அச்சிட வில்லை. ஏன் அதற்குப் பிறகு நான் தொடரவில்லை. நான் முதல் இரவு கதாநாயகியைப் படைத்தேன். அவ்வளவு தான். அதற்குப் பிறகு அவளைக் கொண்டுபோக நினைக்க வில்லை. போகமுடியவில்லை. என் அனுபவமும் அதோடு நின்று விட்டது. பிறகு தொடரவில்லை. அதற்குப் பிறகுதான் இந்தக் கதாநாயகன் பிறந்தான். அவன்தான் முதன்முதலில் அறிமுகப் படுத்தினேனே என் 'முதற்குட்டி ரவி. அவன்தான் என் கடைக்குட்டியும் என்று நினைக்கிறேன். அவன் பிறந்ததும்தான் அவர் என்னை விட்டுப் பிரிந்தார். அதற்குக் காரணம் என்ன? அதுதான் என் கல்லூரி அனுபவங்கள். இவை எல்லாம் என் நினைவுகளோடு இருக்கவேண்டியவை. அவற்றை எல்லாம் என் நாட்குறிப்பில் எழுதி வைத்திருந் தேன். என்னைப்பற்றி எழுதிய கடிதங்கள், பாராட்டுகள், கவிதைகள், கதைகள் இவற்றை எல்லாம் சேர்த்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். யாருக்காக இவற்றை எடுத்து வைத்தேன் என்று எனக்கே தெரியாது. என்னுடைய வாழ்க்கையையே ஒர் இலக்கியமாக ரசித்தேன். அந்த ரசனைதான் அந்த நாட்குறிப்பும், கடிதப் பாராட்டுகளும். அதற்கு முன்னல் தெளிவாக எழுதியிருந் தேன். "ஒவ்வொருவருக்கும் சில தனிமைகள் உண்டு; அனுபவங்களும் உண்டு. அவை அவர்களுக்கே சொந்தம், தயவு செய்து என் ஏடுகளைப் புரட்டிப் பார்க்காதீர்கள்" என்று எழுதி இருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/79&oldid=825595" இலிருந்து மீள்விக்கப்பட்டது