பக்கம்:சிதறல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 கவிதை ஆசிரியர் ஒருமுறை சொல்லி இருந்தார். நாவலோ கவிதையோ எழுதுவதில் ஒரு சிரமம் இருக்கிறது. பிறர் வாழ்வை வைத்து எழுதினுலும் உலகம் நம்பாது; அது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்று தான் நினைக்கும். எழுத்தாளனின் குடும்பமே அதில் இடம் பெறு வதாக நினைப்பார்கள். அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கை அதில் இடம் பெறுகிறதா என்று கவனிப் ᎿᎫfIII &56rᎢ . - அப்படி நினைத்துக் கொள்ளட்டுமே என்று துணி கிறவர்கள்தான் எழுத முடியும். அது மட்டும் அல்ல அப்படிப்பட்ட அனுபவங்களை எழுதும் பொழுதுதான் அது உணர்வு மிக்க படைப்பாகிறது என்று சொல்லுவார். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கவிஞனுக்கும் ஒரு 'கவிதைப் பெண் உள்ளத்தில் உருவாகி விடுகிருள். அதை வைத்துத்தான் அவன் படைக்கிருன் என்று கூறுவார். நானே அவரைக் கேட்டு விட வேண்டும் என்று நினைப்பது உண்டு. அவர் கவிதையில் வரும் 'பாவை யார் என்று கேட்க வேண்டும் என்ற ஆசை. இப்பொழுது நினைவுக்கு வருகிறது. ஒரு சிறந்த எழுத்தாளன் படைப்பு. 'பாவை விளக்கு 'சித்திரப் பாவை’ அந்தக் கலைஞனும் அந்தப் பாவையை மறக்கவில்லை என்பதை நினைத்துப் பார்க்கிறேன். யாரோ சில பாவைகள் இந்தப் பேனவுக்கு எழுதும் மையாக அமைந்து விடுகிறர்கள். அவர் நிச்சய மாகத் தன் மனைவியை வைத்து எழுதி இருக்கமாட்டார். அவர் மணமாவதற்கு முன்னலேயே கவிதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறர். அவர் ஏதோ வாழ்க்கையில் யாரை யோ சந்தித்து இருக்கிருர். பழகி இருக்கிருர். அவள் அவருக்குக் கிடைக்காமல் போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். "நான் ஒரு புலன் உணர்வு மிக்க எழுத்தாளன் என்று தன்னைக் கூறிக் கொள்வார். நான் என்ன செய்வது அழகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/80&oldid=825599" இலிருந்து மீள்விக்கப்பட்டது