பக்கம்:சிதறல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 "இவர்தான் பேபியின் அப்பாவா?’ என்று கேட்டு விட்டாள். "அந்த பாக்கியத்தை நான் பெறவில்லை' என்று அவசரப்படடுச் சொல்லிவிட்டான், . அதைக் கேட்டுக்கொண்டே என் "அவர் அங்கு வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவன் மவுனமாகி விட்டான். மவுனம் அங்கு நிலவியது. "நான் அவளோடு படித்தவன்." என்று அறிமுகம் செய்து கொண்டான். "படிப்புத் தொடர் கதையாகக் கூடாது' என்று அவர் சொல்லவில்லை. அந்த மவுனத்தின் அர்த் தத்தை என்னல் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் மணந்தால் என்னை மணப்பது இல்லா விட்டால் வாழ்நாள் எல்லாம் வெறும் திரைப்படங்களைப் பார்த்துப் பொழுது போக்குவது. என்ற உறுதி கொண்டிருந் தான். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒருவனைப் பைத்தியம் கொள்ளும்படி செய்ய முடியும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவன் கவிதைப் பைத்தியம் போல இருந்தான். "ஒராயிரம் கவிதைகள் எழுதி இருப்பான். ஆனல் அவன் இதுவரை வெளியிட வில்லை. சில சமயம் கலைப் படைப்பு கள் மனித உணர்ச்சிகளுக்கு வெளியீடாக அமைகின்றன அவன் வெறும் திரைச் சீலைகளைக் கண்டவன்; வேறு எந்தப் பெண்ணின் சேலையையும் காணுதவன்; எட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/84&oldid=825607" இலிருந்து மீள்விக்கப்பட்டது