பக்கம்:சிதறல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இருந்து வியந்து இருக்கிறன். கட்டி அணைத்து மகிழ்ந்தவன் அல்ல; என்னை அவன் தன் இதயத்தில் வைத்து பூஜை செய்தான். அது எனக்குத் தெரியாது. இப்பொழுது அவன் இதயம் பூஜ்யமாக இருக்கிறது. அம்பு எய்து வம்பு செய்தவன் இதுவரை யார் என்று கண்டது இல்லை; வாழ்த்துச் செய்தியைக் கவிதை வடிவில் தந்தவன் வாழும் இடம் எது என்பதும் தெரியாது. நாங்கள் பிரிந்தபோது சுயசரித்திர ஏடு ஒன்று வெளியிட்டிருந்தோம். அழகான அச்சில் எங்கள் பெயர்கள் பொறிக்கப் பட்டு இருந்தன. எங்கள் ஆசிரியர்களை அதில் முகவரியோடு அறிமுகப் படுத்தி ைேம். அந்தப் பெயர்களைச் சில சமயம் புரட்டிப் பார்ப் பேன். அவர்களுள் ஒருத்தியை நான் மறக்கவே முடியாது. சாத்தனூர் அணைக்கட்டுக்குச் சென்ற போது சாதம் கட்டி வந்தவர்கள் சில பேர். அவளே வீட்டில் சமைத்து வந்த புளிச்சோறு, அதற்குத் துணையாக உதவிய கறிவகைகள், தின்று மாளாத கட்டுச் சோறு இவை மறக்க முடியாதவை. எங்கள் ஆசிரியர்களும் சிலர் வந்திருந்தார்கள். அங்கே ஒரு காட்சி எங்களை இழுத்தது. அவன் அங்கே செத்துக் கிடந்தான். அவனைச் சுற்றிப் போலீசார் அவன் உடலைக் காவல் செய்தனர். அந்தக் காட்சி என்னுள் ஒரு கவிதையை எழுப்பியது. வீடு திரும்பியதும் அதை முதல் வேலையாக எழுதி வைத்தேன். அவன் எழுத்து-இது அதன் தலைப்பு. 'நண்பர் சிலருடன் அணைக்கட்டு சென்றேன் நடந்து சென்றேன் கால்செருப்பு அறுந்து விட்டது. அதல்ை என்ன? நடக்கமுடியாதா என்ன? எங்கும் தண்ணிர்! எங்கும் பசுமை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/85&oldid=825609" இலிருந்து மீள்விக்கப்பட்டது