பக்கம்:சிதறல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அவர் ஒரு கவிதையாக எழுதி எனக்கு அனுப்பி வைத்தார். "சிரித்துச் சிரித்து வயிறு புண் ஆயிற்று; நினைத்து நினைத்து நெஞ்சு புண் ஆயிற்று; மகிழ்ச்சியால் வயிறு புண் ஆகிறது; வேதனையால் நெஞ்சு புண் ஆகிறது இவை வைத்தியருக்குத் தெரியுமா?" என்று கேட்டு எழுதி இருந்தார். அதற்குத் தெரியாது என் பது சரியான தலைப்பாக நினைத்தேன். அவரும் அதை ஒப் புக்கொண்டார். அந்தத் தாடிக்காரப் பெரியவரைப்பற்றி எழுதிய கவிதை இதுதான். மாமியார் மெச்சிள்ை-இது அதன் தலைப்பு. காலையில் எழுகிறேன் பேப்பர் படிக்கிறேன்; இன்னும் ஏதேதோ பரபரப்பாக இயங்குகிறேன்: ஒன்று மட்டும் முடிவது இல்லை; தினம் த்னம் ஷேவ் பண்ணுவது; என்ன செய்யலாம் யோசனை செய்தேன். தாடியை வளர்த்தேன்; அதைத் தடவிக் கொடுத்தேன்; மெத்த வளர்ந்தது; ஆளே மாறினேன். மாமியார் வந்தாள்; யார் இந்தச் சாமியார் என்று கேட்டாள். 'அம்மா அவர்தான்' என்ருள் அவள் என் மனைவி. "அவரா இவர் அடியோடு மாறிவிட்டாரே' "இவர் அடியோடு மாறவில்லை. முடி மட்டும்தான் மாறினர்' என்ருள். சின்னுள் சென்றன; முடியும் சேர்ந்தன. காய்த்துப் பின்னிக் காய்கள் தொங்கின. அப்புறம்தான் புத்தி வந்தது; அறுவடை செய்தேன்; அழகான முகம். நான்தான அது எனக்கே தெரியவில்லை; மறுபடியும் சொன்னாள் வேறு யாரும் இல்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/89&oldid=825617" இலிருந்து மீள்விக்கப்பட்டது