பக்கம்:சிதறல்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 அவளேதான்; அதுதான் என் மாமி. "ஆளே மாறிவிட்டாரே மாப்பிள்ளை இவர்தான்" என்ருள் அவன் தாடியைப் பார்க்கும்பொழுது எல்லாம் அந் தப் பெரியவர் நினைவுக்கு வருகிருர். என் கவிதை நினை வுக்கு வருகிறது. நிச்சயமாக என் கவிதையை இவனும் படிக்க வேண்டும் என்று நினைப்பேன். அவன் என்னையே விரும்புகிறன் என்பது அவனை வெறுக்கச் செய்தது. நான் மணமாகாத நிலையில் என்னை வழிபட்டான். நானும் அவன் விழிபட்டேன். அவன் அப்பொழுது ஒரு சொல் கேட்டிருந்தால் மறு சொல் பேசி இருக்க மாட்டேன். எனக்கு ரொம்ப நாளாகக் காதலித்துக் கலியாணம் செய்திருக்க வேண்டும் என்ற குறை இருந்தது. அந்தக் குறை தீர்ந்திருக்கும். கலியாணம் ஆன பிறகு அதுவும் நான் ஒரு குழந்தைக்குத்தாய் என்று பட்டம் சூட்டிக் கொண்ட பிறகும் அவன் என்னைச்சுற்றி வட்டம் இடு கிருன் என்ருல் அவனிடமிருந்து விடுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை. அவனுக்கும் என்னைவிட என் மகன்மேல் ஆசை மிகுந்துவிட்டது. அவனும் அவன் மீது உயிர் விடுகிருன். அப்பா கிடைக்காத வாழ்வில் அவனே அவன் தப்பாகக் கொண்டுவிட்டான் அப்பாவாக, அவனுக்கு அவன் தாடி ஒரு விளையாட்டுப்பொரு ளாகிவிட்டது. விளையாடுவதற்கு அவனுக்குப் பிரியமான பொருள் தாடிதான். அதை இழுப்பான். அவன் நோய் பொறுக்காமல் வளைந்து கொடுப்பான். "மெல்லிய கூந்தலைத் தடவ வேண்டி அவன் கரங்கள் நீளமான ாடியை இழுத்துப் பிடித்தான்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/90&oldid=825622" இலிருந்து மீள்விக்கப்பட்டது