பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் IX

விபூதி ஸ்நானம்

இவ் விபூதி ஸ்நானம் மல ஸ்நானமெனவும் விதி ஸ்நானமெனவும் இருவகைப்படும். இவ் விரண்டனுள் முன்னர்த்தாகிய மல ஸ்நானஞ் செய்த பின்னர் விதி ஸ்நானஞ் செய்யத் தக்கது. மல ஸ்நானமாவது வலக்கை அணிவிரல் நடுவிரல் சுட்டுவிரல்பெருவிரல் நாலுங்கூட்டி நிரோதான் முத்திரையால் சலமெடுத்து ஓம் இருதையாய வெளஷட் என்று விபூதியில் விட்டுக் கவசாய நம: என்று குழைத்து 'ஸ்ள்” என்னும் அத்திர பீசத்தால் உச்சி சரணாந்தம் திவ்விய முத்திரையால் பூசுவதாகிய இதுவே மல ஸ்நானமாம். பின்பு கவசாய நம: எனக் கை கழுவுக.

இனியொரு சாரார் அஸ்திர மந்திரம் உச்சரித்து விபூதித் தூளியை வலக்கைப் பெருவிரல் அணி விரல்களால் எடுத்துச்சிரசு முதற் பாதம்ஈறாகப்பூசுதலாகிய மல ஸ்நானஞ் செய்தலினால் ஆன்மாவைப் பந்தித்த மூலமாகிய ஆணவமானது தனது சத்தி கெட்டொழியும் என்பர். -

இனி, விதி ஸ்நானமாவது விபூதியை முக்குறித் தொகுதியாகத் தரித்தல். இங்ங்னந் தரித்தல் ஆணவம் கன்மம் மாயையென்னும் மும்மலங்களையும் அழித் தொழிக்குங் கருத்தினாலாம்.

முன்புபோல விபூதியெடுத்து அபிமந்திரித்து அந்தப்படிச்சலம்விட்டுக் குழைத்து அணிவிரல் நடுவிரல் சுட்டுவிரல் ஆகிய மூவிரலுங் கூட்டித் திரிசூல முத்திரையால் பதினாறுதான்ங்களிலும் தரிப்பது உத்தமம், அணிவிரல் நடுவிரல் பெருவிரலாலுந்தரிக்கலாம். தரிக்கிற