பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசையும் வழிபாடும் “நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லாமல் கனைகழல் ஈசனைக்கான அரிதாம்" என்றார்.திருமூலர்.

கடவுளைத் - தெய்வத்தைப் - பரம்பொருளை நம் செம்பொருளை நம் நெஞ்சம் முழுவதையும் கொண்டு தேடினால் அவ் வாழ்முதலை உறுதியாகக் காண்போம்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போல் கனலிற் பொரிய வறுப்பினும் அன்பொடு உருகி அகக் குழைவார்க்கு அன்றி

என்போல் மணியினை எய்த ஒண்ணாதே திருமூலர்.

எனவே கடவுளிடத்தில் அன்பு செய்வதே வழிபாடு, ஆசையைளிப்பதே ஆராதனை.இந்நிலை முழுமைநிலை.

முழுமைநிலை அடைவது ஒரே தாவாகத் தாவுவதன்று. படிநிலைகள் பல உள்ளன. அன்பு பாராட்டி, அன்பால் ஆட்கொள்ளப்பட்டு, அன்பால் வாழப்பிறந்தவர்கள் நாம் என்றாலும் அன்பு (இறையருள்) தேடிப்பெறுவதிலும் நாடி வருவதே நன்று. மனிதன் அகத்தே உள்ளது.தெய்வீகம்.