பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 4

மனிதனை மாமனிதனாக்குவதில் ஆன்றவிந்தடங்கிய சான்றோர்களுக்குப் பெரும் பங்குண்டு. அவர்களுள் அடங்குபவர்களே சித்தர்கள். அவர்கள் பொறுப்பு மக்கள் அறிவைத் தெளிவுப்படுத்தி, விரிவாக்கிப் பரப்புவதோடு நில்லாமல், உள்ளுயிரின்.(ஆன்மா) உணர்வின் உண்மை யான உயிர் உயர்வுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் அவர்கள். எல்லா உலக மக்களுக்கும் வழிகாட்டுவதே அவர்கள் தலையான பொறுப்பு:என்றுணர்ந்தனர்.

உண்மையான சமயப்பற்று கொண்டவர்கள் சித்தர்கள்; 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று மெய்யுணர்வும் மெய்யறிவும் பெற்றவர்கள். செருக்கும் தற்பெருமையும் அறவே அற்றவர்கள். அவர்கள் பணி வுடைமையும் அடக்க முடைமையும், அருளுடைமையும் பரிவிரக்கமும் ஒருங்கே கொண்டிருப்பவர்கள். தம் கடன் பணிசெய்துகிடப்பதே என்று பணிவில்பயிற்சி அளிப்பதே அவர்தம் கல்வி. அதாவது இறையை வழிபடக் காட்டும் நெறி.

பல சித்தாந்தக் கோட்பாடுகளும் மெய்ப்பொருள் கொள்கைகளும் வெவ்வேறாக விளங்குவது ஒரு மரத்தின் நாற்றிசைக் கிளைகளைப்போல. கடவுட்கு நாம் சூட்டும் பெயர்கள் பற்றியும் அச் செம் பொருளை நம் சிந்தையில் பொருத்த உள்ள வழிகள் பற்பல. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வழி முறைகளைப் பின்பற்றும் சேரும் இடம் ஒன்றே.