பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சித்தர்கள் பூசாவிதிகள்

சித்தர்கள் கூறும் பூசா விதிகள் ஒவ்வொன்றிலும் ஓர் அறிவியல் கூறு பொதிந்துள்ளது. மனக்கோயில் எழுப்ப உதவும் சாரக்கட்டுகள்தாம் விதிகள். நெஞ்சக்கோயில் நிறைவடைந்தபின் அவை பிரித்துவிடத் தக்கவை.

சித்தத்தைச் செம்பொருள்பால் ஈடுபாட்டுடன் நாம் எந்த அளவில் ஆண்டு செயல் முறையில் நின்று உள்ளம் உரையைச் செலுத்துகிறோமோ அந்த அளவுக்குச் சாதனைகளைச் செய்ய முடியும். முழு மனத்துடன் ஒன்றிணைந்து தூய்மையை வளர்ப்பதின் மூலம் அறிவுத் தெளிவைப் பெருக்கி, ஆருயிர் அனைத்தும் நாம் என ஆழப்படுத்த முடியும். அந்நிலையை எய்தவே பூசாவிதிகள்.

உலகப் பெரும்புடவி அனைத்தும் ஒரு விதிக்குள் இயங்குபவையே. அவ் விதியைக் காட்டும் சித்தர்கள் செம் மனத்தினர்.உலகில் சமயம் என்பது சித்தாந்த உய்த்துணர்வு களிலும் வெறும் ஆசார அனுட்டான - சடங்குகளிலும். அடங்கியதில்லை. அகத்தெளிவும், உள்ளுயிர் நுண்பேரறிவும் சமுதாய மனச் சான்றின் எழுச்சியும் தான்் சமயம் என்பதைவலியுத்துவதே சித்தர்களின்பூசாவிதிகள்.

சித்தர்களின், நூல்கள் பதிப்பித்த எவரும் இப் பூசா விதிகளைத் தனித்து எண்ணியதும் இல்லை. பதிப்பித்ததும் இல்லை. அருமை நண்பர் ஆ. கோமதிநாயகம். பல சித்தர்களின் பூசாவிதிகளைத் தொகுத்தளிக்கக் கோரினார். தொகுத்துப் பார்க்கையில் சைவத்தைச் சாத்தத்தைச்