பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் பூசாவிதி - - 22

சொல்லவென்றால் சோதிமய மானதாயே

சுந்தரியே உன்பாதங் கொடுப்பாய் அம்மா நல்லதொரு திருநடனம் ஆடுந் தேவி

நாதாக்கள் பணிகின்ற வாம ரூபி வல்லசித்தர்மனதில் உறை மகிமைத்தாயே

வாலைதிரி புரையெனக்கு வாக்குத் தந்து தொல்லுலகத்து ஆசைகளை மறக்கச்செய்து

சோதிமனோன்மணித்தாயே சுழுனைவாழ்வே.12

பாசவலை தனிற்சிக்கி அலையாமல்தான்்

பண்புடனே அஞ்ஞானம் அதனைப்போக்கி நேசமுடன் சதுரகிரி மலையிலேதான்்

நித்தியமும் நடனமது புரிந்த நீலி பேசரிய ஞானமதை எனக்க ளித்த

பேரான சுமங்கலையே பெரியோருக்குத் தோசமது வாராமற் காக்குத் தேவி -

சோதிமனோன்மணித்தாயே சுழுனைவாழ்வே. 13

பத்துடனே நாலாகி எங்குந்தான்ாய்

பராபரியே பரஞ்சோதிப் பருவ மாகிச் சித்தாகி உலகமெங்கும் மயக்குந்தாயே

திருவருளேதிரிபுரையே தேவி அம்மா வித்தாகி முளைத்தெழுந்த சுடரேதீப

விமலியே குண்டலிஓங்கரரசத்தி சத்தான் அண்டமெலாம் நிற்ைந்து நின்ற

சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. 14