பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் 21

நீதமுடன் உருவாகி அரூபமாகி

நிட்களமாய் நிராமயமாய் நின்ற நீலி வேதமுடி வாகிநின்ற விமலித்தாயே

விண்ணொளியாய்ப் பரவெளியாய் அகண்ட சத்தி பாதமதிற் சிலம்புகலிர்கலிர்என்றோதப்

பத்தருக்காய்ப் பிரசன்னமான ரூபி சோதனையாய்ச் சோமகலை யாக வந்த

சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. 9 காலான சந்திரகலை நாலுங் காட்டி

கண்மூடித் திறக்குமுன்னே சோதி காட்டி மாலான அரிதனையும் அங்கே காட்டி -

மறைந்துநின்ற சுயரூபந்தன்னைக் காட்டி பாலான சோமகலைப் பாலும் ஊட்டி - பாங்குடனே எனைவளர்த்த பருவ மாதா

சூலானதாய்வயிறில் சொரூபந்தந்த - - சோதிமனோன் மணித்தாயே சுழுனைவாழ்வே.10

அண்டரண்ட புவனமுந்தான்் நீயே யானாய்

அம்புவியில் சோதிமனோன்மணியும் ஆனாய் - கண்டதொரு காட்சிகளைச்சொல்லப்போமோ

காரணியே பூரணியே கன்னியாளே விண்டதொரு மகிமைகளை வெளிவிடாமல்

வேண்டியதோர்தீட்சைகளைமுடித்துக்கொண்டேன் தொண்டனைநீ எப்போதும் ஆள்வாயம்மா

சோதிமனோன்மணித்தாயே சுழுனைவாழ்வே.11