பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

மாளிகை - கங்கை கொண்ட சோழ புரத்திலுள்ள குளிர்ந்த சோலை சூழ்ந்த அரண்மனை (எ - று)

மற்றொரு பொருள் -வண்மை புயலை கீழ் படுத்து - வள விய மேகத்தைப் பழிக்குங் தன்மையதாய், வானம் தரு மலைந்து சுவர்க்கத்துள்ள கற்பக விருக்ஷங்களோடு (கொடைத் தொழி லில்) மாறுகொண்டு, மண் குளிர சாயல் வளர்க்கும் - மண் ணுலகிலுள்ளார் களிப்படைய மென்மைத் தன்மையைப் பெரி தும் உடையதாகும், தண்மை கவிகை கொங்கு ஆர் அலங்கல் அநபாயன் - குளிர்ந்த குடையையும் மணம் நிறைந்த ஆத்தி மலர் மாலையையும் உடைய அநபாய சோழனாகிய, கங்காபுரம் ஆளி கை- கங்கை கொண்ட சோழ புரத்தை ஆளும் மன்னவ னது கை (எ . று)

மேற்செய்யுளில், கங்காபுரமாளிகை’ என்பது கங்கா புரத்திலுள்ள மாளிகை எனவும், கங்காபுரத்தினை ஆள்பவ னுடைய கை எனவும் மகர ஒற்றுப் பெயர்ந்து ஒற்றுப் பெயர்த் தலாயிற்று. அலங்கற் குலதீபன் கொய்பொழில் சூழ் என் பதும் பாடம். - -

2. பொற்புடைய மாதர் புலவாரோ பொய்ம்மருவாச்

சொற்பயிலும் பாண சுடர்மணித்தேர்-கற்புடைய வஞ்சிநகர் சேரினற மாமருதா ரான்மகிழா . “நஞ்சனைய நல்வயலூ ரற்கு.” (உக)

இதன் பொருள் :-பொய் மருவா சொல் பயிலும் பாண - பொய்யோடு கூடாத சொற்களைப் பலகாலும் சொல்லாநின்ற பாணனே! சுடர் மணி தேர் - தலைவனது பிரகாசமானமணிகள் கட்டிய தேர், கற்பு உடைய வஞ்சி நகர் சேரின் அறமா - கற் பினையுடைய தலைவியின் அரண்மனையை அடைந்தால் அது தருமமாகுமா? (ஏனெனில்), பொற்பு உடைய மாதர் புலவாரோ அழகினையுடைய பரத்தையர் ஊடுதலைச் செய்யாரோ? மரு தாரான் மகிழா நஞ்சு அனையம் நன்மை வயல் ஊரற்கு - மணம் பொருந்திய் மாலையையும் நல்ல வயல்களையுடைய ஊரினையு முடையானாகிய தலைவனுக்குக் களிப்பினைத் தராத விடம், போன்றுள்ளேம் அல்லேமோ யாங்கள் ? (எ - று)

இச்செய்யுளின் மூன்றாமடியில், வஞ்சி, நகர், சேர், இல் நற, மா, மருது, ஆர், ஆல், மகிழ் என்னும் பத்து மரப் பெயர்கள் ஒற்றுப் பெயர்ந்து வந்தன. 'நறா' நறவென நின்றது.