பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாத்திரைச் சுருக்கம் 561

' குறியதன் கீழாக்குறுகலும் என்ற விதியானமைந்தது. இச் செய்யுள் ஒற்றுப் பெயர்த்தலாக அமைந்ததும் பின் வரும் வெண் பாவானுணர்க. :- -

"ஓரடியுட் பத்து மரமுடனொற் றுப்பெயர்த்துத் தேர்மருவி யூடற் றிறம்புனைந்து - நீர்மை மருதம் புணர்ந்ததுவும் வெண்பாவாய் வையம் கருதப் பகர்வான் கவி. ”


16. மாத்திரைச் சுருக்கம்

யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு சொல்லின்கணுள்ள எழுத்தின் மாத்திரையைச் சுருக்குதலால் அச்சொல் வேறு சொல்லாகி வேறு பொருள் பயக்கும்படி பாடப்படுவது மாத் திரைச் சுருக்கமாகும்.

இதற்கு உதாரணம்:

நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீண்மரமாம்

நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம்-சீரளவுங் காட்டொன் றொழிப்ப விசையா மதனளவு மீட்டொன் றொழிப்ப மிடறு. ” (கூo)

இதன் பொருள் :-நேரிழையார் கூந்தலின் ஓர் புள்ளி பெற மாதர் கூந்தலில் ஒரு புள்ளி வைக்க, நீள் மரமாம். ஒரு நீண்ட மரமாகும்; நீர் நிலை ஒர் புள்ளி பெற நெருப்பாம் - நீர் நிலையில் ஒரு புள்ளி வைக்க நெருப்பாகும்; சீர் அளவும்-சிறப்புப் பொருந்திய, காட்டு ஒன்று ஒழிப்ப இசையாம் - காட்டில் ஒரு மாத்திரை குறைப்ப இசைப்பாட்டாகும்; அதன் அளவு மீட்டு ஒன்று ஒழிப்ப மிடறு - அவ்விசைப் பாட்டின் மாத்திரையின் மீளவும் ஒரு மாத்திரை குறைப்பக் கழுத்தாகும் (எ.று)

நேரிழையார் கூந்தல் - ஓதி.இதன்கணுள்ள நெட் டெழுத்தாகிய 'ஓ' வின்மேற் புள்ளி வைக்க ஒரு மாத்திரை குறைந்து குற்றெழுத்தாகிய ஒகரமாய், ஒதி என்றாகி, ஒரு மரத்தின் பெயராகும்.

நீர் நிலை - ஏரி 'ஏ 'காரத்தின்மேற் புள்ளி வைக்க, எரி என்றாகும். எரி -நெருப்பு.

, 71