பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) திரிபாகி - 565

இதற்கு உதாரணம்:

மூன்றெழுத்து மெங்கோ முதலீ றொருவள்ளல் என்றுலகங் காப்ப திடைகடை-யான்றுரைப்பிற் பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்தேத்துங் காமாரி காரிமா ரி.” (௩௩)

இச்செய்யுளின்கண், மூன்றெழுத்துமெங்கோ என்றது சிவன் எனப் பொருள்படும் காமாரி என்னுஞ் சொல்லினை எனவும், அதன்கண் உள்ள முதலெழுத்தையுங் கடையெழுத் தையுஞ் சேர்க்கக் காரி என்றாய் ஒரு வள்ளலின் பெயராகும் எனவும், இடையெழுத்தையுங் கடையெழுத்தையுஞ் சேர்க்க மாரி என்றாய் உலகத்தினக் காக்கும் மழை எனப் பொருள் படும் எனவும் அறிக. காமாரி - மன்மதனுக்குப் பகைவனாகிய சிவன். -

இத்திரிபாகியைத் திரிபதாதி என்பர் மாறன் அலங்கார முடையார். -

  • மூன்றெழுத் தொருமொழி முதலீ றிடையீ

றான்ற பொருள்பிற வாந்திரி பதாதி. ” என்பது சூத்திரம்.

2. முன்னொரு வூரின் பேராம்

முதலெழுத் தில்லா விட்டால் நன்னகர் மன்னர் பேராம்

நடுவெழுத் தில்லா விட்டால் கன்னமா மிருகத் தின்பேர்

கடையெழுத் தில்லா விட்டால்' உன்னிய தேனின் பேரா -

மூரின்பேர் விளம்பு வீரே (௩௪) என்ற தனிப்பாடலும் இவ்வணியைப் பின்பற்றியதாகும்;

ஊரின் பேர் - மதுரை. மன்னர் பேர். துரை, மிருகத்தின் பேர் - மரை. தேனின் பேர் . மது.

இனி, நடுவெழுத்தலங்காரம்" என்று பிற்காலத்தோர் எழுதிய கவிகளும் இவ்வணி வகையைச் சார்ந்தனவாம்.