பக்கம்:சித்தி வேழம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sé சித்தி வேழம் படுகுர்ணமாகப் போகும்படி செய்தவர் அவர். தம் கையில் பொன் மலையையே வில்லாக வளைத்து வைத்துக்கொண் டிருக்கிறவர். அத்தகைய வீரருக்குப் புதல்வன்தான் என் மகளுடைய காதலன்.' -*. புகைமிகும் அனலில் புரம் பொடி படுத்த - பொன்மலை வில்லிதன் புதல்வன். 'அவன் எந்த ஊரில் இருக்கிறவனே?' "திக்கெல்லாம் பாராட்டும் கீர்த்தியை யுடைய திரு விடைக் கழியில் இருக்கிருன்.' - "அவனே அங்கே சென்ருல் பார்க்கலாமோ?” 'நன்ருகப் பார்க்கலாம். அங்கேயுள்ள திருக்கோயிலில் அழகிய குரா மரத்தின் நிழலில் அவன் கின்றுகொண் டிருப்பான்.” - "அவனுடைய திருநாமம் எது?” - 'திருநாமமா? ஒன்ருக இருந்தால் இதுதான் என்று. சுட்டிச் சொல்லலாம். அல்லது பத்துப் பெயர்கள் என்ருல் அவற்றையும் சொல்லலாம். அவனுடைய பெயர்கள் பல பல; அவற்றை எண்ணிக்கையில் அடக்க முடியாது; பெயர் களின் தொகை எண்ண எண்ண மிகுந்துகொண்டே செல்லும்." - - - - திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில் திருக்குர நிழற்கீழ் நின்ற தொகைமிகு நாமத்தவன். f 'நீ சொல்வனவற்றை யெல்லாம் பார்த்தால், அன்பர் கள் யாவரும் வந்து வணங்கும் திருவடியையுடைய முருகன் என்றல்லவா தோன்றுகிறது?" . . ஆம், ஆம், நீ சொல்வது சரிதான். அவன் திருவடியை எண்ணித்தான். இவள் மடலேறுவேன் என்று தொடங்கி யிருக்கிருள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/102&oldid=825700" இலிருந்து மீள்விக்கப்பட்டது