பக்கம்:சித்தி வேழம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சித்தி வேழம் யானைக்கு உணவளித்துப் பாதுகாப்பது எவ்வளவு அருமை என்பதை இந்தக் கதை தெரிவிக்கிறது. இந்தச் சித்தி வேழத்துக்கு யார் தீனி போடுவது? பிள்ளையாருக்குத் தொப்பையப்பன் என்பது ஒரு பெயர். எத்தனை நிவேதனம் செய்தாலும் வாரிச் சுருட்டி வயிற்றுக் குள் திணிக்கும் இயல்புடையவர் அவர். அவருக்கு உணவு போட்டுக் கட்டுமா? சித்தி வேழத்தைக் கண்டு அப்படி அஞ்சவேண்டிய தில்லையாம். அதற்குக் கவளமாகக் கொடுக்க நாம் எதையும் தேடவேண்டியதில்லை. இருக்கிற பொருளேயே கொடுக்க லாம். நம்மிடம் மிகுதியாக இருக்கும் பொருளேக் கொடுத் தால் மகிழ்ந்து உண்ணும் இந்த யானே. r நம்மிடம் இருக்கும் அந்தப் பொருளால் நமக்கு இன்பம் இல்ல; துன்பந்தான் விளைகிறது. உண்மையைச் சொல்லப் போனல் அந்தப் பொருள் நம்மிடம் இருப்பதல்ைதான் நமக்கு எல்லா வகையான துன்பங்களும் விளேகின்றன. மேலும் மேலும் பிறந்து பிறந்து சாவதற்குக் காரணமே அந்தப் பொருள்தான். அதற்குப் பசுபோதம் என்று பெயர். நம்மை அறியாமல் நம்மிடம் இருந்து பல தீவினை களேச் செய்யச் செய்து அலேக்கழிக்கிறது. இறைவனே உணரமாட்டாமல், இந்த உலக வாழ்வே கித்தியம் என்று நினைக்கச் செய்கிறது. செம்பிலே களிம்பு இருப்பது போல நம்மிடம் இது இருக்கிறது. இது கழன்று போனல் நமக்கு இன்பம் உண்டாகும். இந்தக் கள்ள வினைப் பசுபோதத் தையே, சித்தி வேழத்துக்குக் கவளமாக இட்டுவிட்டால் இரண்டு நன்மைகள் உண்டாகின்றன. ஒன்று, நமக்குத் துன்பம் தரும் பொருள் நம்மை விட்டுப் போகிறது; மற் ருென்று, சித்திவேழத்துக்குக் கவளம் கிடைக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களே வீழ்த்துவது போன்ற செய்கை இது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/11&oldid=825708" இலிருந்து மீள்விக்கப்பட்டது