பக்கம்:சித்தி வேழம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித் தி வேழம் 3. அன்பு என்னும் சங்கிலித் தொடரை அந்த யானேயால் தள்ள முடியாதாம். அதல்ை அதை உறுதியாகக் கட்டி விடலாமாம். - - யானைக்குக் கூடம் கட்டி முளையடித்துச் சங்கிலியால் பிணித்துவிடலாம். ச்ாது யானையாக இருந்தால் இப்படிச் செய்வது எளிதாக இருக்கும். ஆனால், வேறு ஒரு சங்கடம் இருக்கிறது. சாதுவான யானையால் யாருக்கும் தீங்கு இல்லை. அது கட்டுத்தறியை முறிக்காது. மதம் கொள்ளாது. ஆல்ை, அது தீனி தின்னமல் இருக்க முடியாதே! ஆனயைக் கட்டித் தீனி போட ஆராலே முடியும்? என்று ஒரு பழமொழி வழங்குகிறது. ஏழைக்கு ஒரு யானையைப் பரிசாக அளித்து விட்டால், அதைக் காட்டிலும் துன்பம் வேறு வேண்டாம் அவனுக்கு. - ஒரு புலவன் மிக்க வறுமையில்ை ஒர் அரசனிடம் போய் அவனேப் பாடினன். "காள்தோறும் உண்னும் உணவுக்கே வழி இல்லாமல் திண்டாடுகிறேன்" என்ருளும். அந்த அரசன் அவனே உபசரித்துச் சில நாள் வைத்திருந்து, ஊருக்குப் போகும் போது ஒரு யானேயை வழங்கி, "இதைக் கொண்டு போம்” என்ரும்ை. அதைக் கண்டவுடன் புலவ லுக்கு வியப்பும் அச்சமும் உண்டாயின. "எனக்கா இந்த யானே' என்று கேட்டான். "ஆம்" என்ருன் அரசன். "நான் ஒரு வாய்க்கே சோறு இல்லாமல் திண்டாடுகிறேன். இந்த நால்வாய்க்கு உணவு தேடி எப்படிக் கொடுப்பேன்' என்ருன் புலவன். நால்வாய் என்பதற்கு யானே என்று பொருள். தொங்கும் வாயையுடைமையால் அந்தப் பெயர் வந்தது. நான்கு வாய்கள் என்ற பொருள் உடையதைப் போலவும் அந்தப் பெயர் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு புலவர் நயமாகப் பேசினர். அதைக் கேட்ட மன்னன், உடனே உணவுக்கு வேண்டிய ஏற்பாடுகளேயும் செய் தானும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/10&oldid=825697" இலிருந்து மீள்விக்கப்பட்டது