பக்கம்:சித்தி வேழம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சித்தி வேழம் வர் விநாயகரை யானையென்று.சும்மா சொல்லி விடவில்லை. யானை கட்டும் கூடம், அதைக் கட்டும் தறி, சங்கிலி, அதற்கு இடும் கவளம் ஆகியவற்றேடு கொண்டுவந்து நிறுத்து கிறார். - இந்த யானே உலகத்தில் உள்ள யானேயைப்போல, மனிதன் கட்டிய யானைப் பக்தியில் வளர்வது அன்று. இது மிகப் பெரிய யானேதான். ஆனாலும் மிகச் சிறிய இடத்தி லும் நுழைந்து கொள்ளும். இதற்குப் புதிய கூடத்தைக் கட்ட வேண்டும் என்பது இல்லே. இருக்கிற இடத்தைக் கொடுத் தாலே போதும். அன்பர்கள் தம்மிடம் உள்ள சிறிய இடத் தில் இந்த யானையைக் கட்டிப் போடுகிருர்களாம். அந்தக் கூடம் எது தெரியுமா? அன்பினல் கினைக்கும் உள்ளந்தான். உள்ளம் சிறிதா, பெரிதா? அது நுட்பமாக இருப்பதால் சிறியதென்றே சொல்ல வேண்டும். அணு என்று தர்க்க நூல் கூறுகிறது. ஆனால், அது கொள்ளுகிற ஆசை யைப் பார்த்தால் அதற்குச் சமமான விரிவை உடைய பொருள் ஒன்றுமே இல்லேயென்று தோன்றுகிறது. உள்ளமாகிய கூடத்தில் அன்பர்கள் சித்தி வேழத்தை வளர்க்கிருர்கள். அதைக் கட்டுவதற்கு ஒரு முளே வேண்டும் அல்லவா? விடாமுயற்சியாகிய முளேயை அடிக்கிருர்கள். அந்த முளையிலே கட்டிப்போடச் சங்கிலி வேண்டும். இந்த யானே மிகவும் விருப்பத்தோடு கட்டப்படும் சங்கிலி ஒன்று இருக்கிறது. அது அன்பு. அன்பு இருந்தால்தான் இந்த வேழத்தைக் கட்டலாம். உள்ளமாகிய கூடத்தில் ஊக்கமா கிய தறியை கட்டு, அன்பென்னும் சங்கிலியினுல் சித்தி வேழத்தைக் கட்டிப் போடுகிருர்கள் அன்பர்கள். உள்ளம்எனும் கூடத்தில் ஊக்கம்எனும் தறிநிறுவி - உறுதி யாகத் தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி - இடைப்படுத்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/9&oldid=825823" இலிருந்து மீள்விக்கப்பட்டது