பக்கம்:சித்தி வேழம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தி வேழம் அரண்மனை வாசலில் யானேயைக் கட்டியிருப்பார்கள். அரனுடைய மனேயாகிய கோயிலிலே கூடத் திருவாசலில் ஒரு யானே இருக்கிறது. அரண்மனே வாசல்யானே மதம் கொள்ளும்; துதிக்கையாகிய ஒரே கையை உடையது. அரன் கோயில் வாசலில் உள்ள யானே மதத்தை அழிப்பது; ஐந்து கைகளே உடையது. அந்த யானே கடவுள் வரிசை யைச் சேர்ந்தது. கணபதியாகிய ஆண்முகக் கடவுளே அந்த யானே. . - சைவர்கள் எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கின லும் விநாயகரை வணங்கிவிட்டே செயலிற் புகுவது வழக்கம். நூலாசிரியர்கள் சைவர்களாக இருந்தால் கணபதிக்கு ஒரு துதி பாடி விட்டுப் பின்பு நூலே நடத்துவார்கள். வேறு வகையிலும் விநாயகருடைய துதிகளாகப் பல பாடல்கள் தமிழில் இருக்கின்றன. அவை புலவர்களின் கற்ப&னக்கும் கவியாற்றலுக்கும் ஏற்றபடி வெவ்வேறு சுவையுடன் அமைந்திருக்கும். - ஒரு புலவர் சித்தி விநாயகராகிய யானையைப் பாடித் துதிக்கிருர். அவரை நேரே துதிக்காமல், சித்தி விங்ாயகக் கடவுளே வணங்கிப் பாவங்களைப் போக்கிக் கொள்வோம்' என்று படர்க்கையில் வைத்துச் சொல்கிருர். . சித்தி விநாயகரைச் சித்தி வேழம் என்று அவர் பாடு கிருர் விநாயகக் கடவுள் யானே முகத்தை உடையவரே யானுலும், உம்புக்குள் சிறந்ததாகிய முகத்தைக் கொண்டு அவரை யானையென்று கூறுவது வழக்கமாகிவிட்டது. புல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/8&oldid=825812" இலிருந்து மீள்விக்கப்பட்டது