பக்கம்:சித்தி வேழம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சித் தி வேழம் ஒவ்வொரு பாட்டும் அமைந்திருக்கிறது. இதைப் பதினேரா வது பாட்டின் முற்பகுதியில் சேந்தனர் குறிக்கிருர். "கொழு மையான திரண்ட வாயையுடைய தாயின் மொழியாகச் சேந்தனர் பாடியவை இவை: தூய மொழியைப் பேசும் அமரர்களுக்கெல்லாம் கோமானுக விளங்கும் முருகனைப் பாடியவை” என்று சொல்கிரு.ர். ** - - சேந்தன்ருடைய ஊர் செப்புறை என்று தெரிகிறது. செழுமையான திரட்சி பெற்ற சோதியையுடைய செப்புறை யாம். அங்குள்ள மாட மாளிகைகள் மணி குயிற்றியமையால் சோதி வீசுவனபோலும். சேந்தனர் முருகனுடைய பெரு மையை வாய்ப்பாகச் சொன்ன சொற்கள் இவை. கொழுந்திரள் வாய் ஆர் தாய்மொழியாகத் தூய்மொழி அமரர்கோ மகனைச் செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன் . வாய்ந்தசொல் இவை. * - (கொழுவிய திரண்ட வாயைப் பெற்ற தாயின் கூற்ருகத் தூய மொழிகளையுடைய அமரர்தலேவகிைய முருகனே, செழுமை யும் திரட்சியும் உடைய சோதி கிறைந்த செப்புறை என்னும் பதியில் உள்ள சேந்தன் புகழும்படி அமைந்த சொற்கள் இவை, துரய மொழி என்பதை அமரருக்கும் கூட்டலாம்; கோமகனுக் கும் கூட்டலாம்; அமரர் கோவாகிய சிவபிரானுடைய திருமகனே என்றும் பொருள் கொள்ளலாம்.) இந்தப் பதிகத்தைச் சொல்லி முருகனை வழிபடுபவர் களுக்கு இடர் நீங்கும் என்று அடுத்தபடி சொல்ல வருகிரு.ர். முருகனுக்குச் சுவாமி என்பது ஒரு பெயர். சுவாமியாகிய முருகன் திருவிடைக்கழியில் திருக்குரா ழேற்கீழ் நிற்கிருன். உதய சூரியனைப் போன்ற ஒளியையுடைய திருமேனியோடு அவன் காட்சி தருகிருன். உதய சூரியன் சிவப்பாக இரும் பான் முருகனும் சிவந்த மேனியினன். காணக் கூசாத வடி வினன் உதய சூரியன்: முருகனும் அத்தகையவன். எழுங் கதிர் ஒளி போன்ற தேசு படைத்தவன் முருகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/116&oldid=825715" இலிருந்து மீள்விக்கப்பட்டது