பக்கம்:சித்தி வேழம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

u uu sir 1:11 அவன் எழுந்தருளியிருக்கும் திருவிடைக்கழியில் சோ.இல சூழ வளர்ந்திருக்கிறது; செழுமையான சோலே, பரந்து விரிந்து படர்ந்த சோலே. அங்கே சுவாமியும், எழுங்கதிர் ஒளியுமாகிய முருகனைத் தரிசிக்கலாம்; தரிசித்து இந்தப் பாடல்களேயே சொல்லித் தோத்திரம் செய்யலாம். இசையோடு சொல்லும் ஆற்றலுள்ளவர்கள் இந்த இசைப்பாவைப் பாடலாம். பாட இயலாதவர்கள் காதாரக் கேட்கலாம். பாடினாலும் கேட்டாலும் நல்ல பயன் உண்டாகும். - நம்முடைய மனத்தில் எப்போதும் மயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. உண்மை இது, பொய் இது என்று தெரியாமல் கலங்குகிருேம். இந்த மயக்கம் கெடவேண்டும். அதற்கு கிலேக்களமான மனங்கட்ட அழியவேண்டும். மனம் என்பது மாயையின் சிறு துணுக்கு. சமஷ்டியாகிய மாயை யின் வியஷ்டியாகிய சிறுதுண்டு மனம். அகண்ட மாயையின் கண்டம் இது. மனம் அற்ருல் மாயை அறும்; மனமற்ற பரிசுத்த கிலேயே இன்ப அநுபவ கிலே. அந்த கிலே வரும், இந்தப் பாடல்களைப் பாடினலும் கேட்டாலும். சுவாமியையே, செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார் - இடர்கெடும் மாலுலாம் மனமே, *. (சுவாமியை, செழுமையான பரந்த சோலேகள் குழ்ந்த திரு விடைக்கழியில் அழகியகுராமரத்தின் கிழற்கீழ் எழுந்தருளியிருக்கும் உதய சூரியனுடைய ஒளிபோன்றவனே, இந்தப் பாடல்களால் துதிப்பார், அவற்றைக் கேட்பவர் ஆகியவர்களுடைய துன்பங்கள் கெடும்; மயக்கம் பரவிய மனமும் கெட்டு இன்புறுவர். செழுந்தடமும் பொழிலும் குழும் என்றும் கொள்ளலாம்: தடம் . தடாகம்: ஏத்துவார் என்று பொதுவாகக் கூறினும் இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/117&oldid=825716" இலிருந்து மீள்விக்கப்பட்டது