பக்கம்:சித்தி வேழம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சித்தி வே மும் பதிகத்தால் ஏத்துவார் என்று கொள்ள வேண்டும். சொல்லாகிய இவற்ருல் ஏற்றுவார் என்று முன்னுள்ளவற்ருேடு கூட்டுவதும் ஆம், இடர் கெடும், மால் உலாம் மனம் கெடும் என்று கெடும் என் பதை இரண்டிடத்தும் கூட்டுக; இடை கிலே விளக்கு. கேட்பாருக்கு மாலுலாம் மனத்தில் உள்ள இடர் கெடும் என்றும் சொல்லலாம்.) - இது தாயின் கூற்ருகப் பாடிய பதிகமாயினும் அகப் பொருட்டுறையாகாது. சுட்டி ஒருவரது பெயர் கொள்வன அகப்பொருளிற் சேரா. இது புறப் பொருளைச் சார்ந்த பாடாண் திணையில் கடவுளரை மானிடப் பெண்டிர் நயந்த பக்கத்தின் பாற்படும். . v - திருவிசைப்பாவில் உள்ள மற்ற எல்லாப் பதிகங்களும் சிவபெருமானப் பற்றியனவே. இந்த ஒன்று மாத்திரம் முரு கனப் பாடியது. பன்னிரண்டு திருமுறைகளில் முருகனைப் பாடிய பகுதிகள் இரண்டு உள்ளன: ஒன்பதாங் திருமுறை யாகிய திருவிசைப்பாவில் உள்ள திருவிடைக்கழித் திரு விசைப்பாவாகிய இப் பதிகம் ஒன்று; பதினேராங் திருமுறை யில் உள்ளதும், நக்கீரர் பாடியதுமாகிய திருமுருகாற்றுப் படை மற்ருென்று. - - - شم - கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் துாய்மொழிஅமரர்கோ மகனேச் செழுத்திாட் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்தசொல் இவை;சுவாமியையே, செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும் மால்.உலாம் மனமே. " . . . * |சேந்தன் மகனைத் தாய் மொழியாக வாய்ந்த சொல் இவை: சுவாமியை, ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர், மனம் கெடும் என்று கூட்டுக.) - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/118&oldid=825717" இலிருந்து மீள்விக்கப்பட்டது