பக்கம்:சித்தி வேழம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சித்தி வே மும் சூரபன்மன் நிமிர்ந்து பார்த்தான். ஆயிரம் ஆயிரம் கதிர்களே வீசிப் பரப்புகின்ற தேசுத் திருவுருவம் தன் முன்னே நிற்பதைப் பார்த்தான். இதுகாறும் அத்தகைய திருவுருவத்தை அவன் கண்டதில்லே. ஒருவனுக்கு அடி பணிந்து வளேயவும், வியந்து அண்ணுந்து பார்க்கவும் அவ னுக்குத் தெரியாது. நின்ருல் நின்றபடியே பார்க்கும் தகை மையன். இப்போது மிக உயரமாக இருக்கும் முருகப்பெரு மானின் திருவுருவத்தை அண்ணுந்து பார்த்தான். அந்தப் பேருருவத்தின் அடி எங்கே என்று குனிந்து பார்த்தான். பார்க்கும்போது, இதுகாறும் இத்தகைய பேருருவத்தைக் கண்டிலோமே என்ற வியப்பு உண்டாகியது. யாரோ சிறிய குழந்தை ஒரு மயில் குஞ்சின்மீது ஏறி வருகிறதென்று அல்லவா நினேத்தேன்? இவ்வளவு பெரிய அழகுத் திருவுரு வத்தை உடையவன் முருகன் என்பதை இந்நாள்வரை கினைத் திலேனே! என்று எண்ணி ஏங்குகின்ருன். "கோலமா மஞ்ஞை மீதிற் குலவிய குமரன் தன்னப் பாலனென் றிருந்தேன் அந்நாள்; பரிசிவை யுணர்ந்தி லேன்யான்; மாலயன் தனக்கும் ஏனே வானவர் தமக்கும் பார்க்கும் மூலகாரணமாய் நின்ற 7, 2 மூர்த்தி இம் மூர்த்தி அன்ருே! என்று வியப்பு அடைகிருன். இது, முதல் தோற்றத்தில் உண்டான வியப்பு: தான் சிறுவன் என்று கருதிய திரு வுருவம் எல்லாப் பொருளுக்கும் மூலகாரணமாக இருக்கிற மூர்த்தியாகத் தோற்றினவுடன் தோற்றிய வியப்பு. அதற்கப்புறம் அவன் தன்னுடைய கண்ணுல் அப்பெரு மானது ரூப லாவண்யத்தை நுகரப் போகிருன். மெல்ல ஒவ்வோர் உறுப்பாக அவன் கண் உலவுகிறது. எல்லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/126&oldid=825726" இலிருந்து மீள்விக்கப்பட்டது