பக்கம்:சித்தி வேழம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அழகு 12+ கட்டிக் காணவொண்ணுத பரப்பும், எல்லே கட்டிச் சொல்ல முடியாத அழகும் உடைய அந்தத் திருவுருவத்தின் திருவடி முதல் திருமுடி வரையில் தன் கண்ணே ஒச்சுகிருன் பக்கத் தில் ஒட்டுகிருன். திருக்கரங்களின் முடிவு காணவில்லே. திருமேனியின் எல்லே காணவில்லை. அழகை அநுபவித்து முழுமையும் காண முடியவில்லே. இந்த நிலையில் எம்பெரு மானுடைய திருவழகில் ஈடுபடுகிருன். 'உலகம் பைத்தியக் காரத்தனமாகக் காமனைப் பேரழகன் என்று சொல்கிறது. அழகுக்குத் தலே எல்லே மன்மதன் என்று அறியாமையில்ை சொல்கிருர்களே! அந்த மன்மதன் எம்பெருமானுக்கு முன் ஞலே கிற்க முடியுமா? எம்பெருமானுடைய திருவுருவம் முழு மையிலும் உள்ள அழகு கிடக்கட்டும்; அவன் திருவடியில் உள்ள அழகின் ஒரு பகுதிக்காவது ஆயிரம் கோடி மன்மதர்களுடைய அழகு எல்லாம் ஒன்ருகச் சேர்ந்து உருவம் எடுத்தாலும் ஒப்பாகுமா?’ என்று ஈடுபட்டு அந்த அழகை வியக்கிருன். "ஆயிர கோடி காமர் அழகெலாந் திரண்டொன் முகி மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணந் தன்னில் து ய இவ் வெழிலுக் காற்ரு தென்றி.டின் இணைய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்?" இந்த அருமையான பாடலே இரண்டு மூன்று இடங் களில் ஆழ்ந்து பார்க்கவேண்டும். இறைவனுடைய பாதார விக்தங்களில் அவன் உள்ளத்தைச் செலுத்துகிருன். இதற்கு முன்னல் அசுரத் தன்மையோடு நின்றவன் அவன். இப் போதோ முருகப்பெருமானுடைய திருவுருவ அழகு அவனேக் கவர்ந்திருக்கிறது. அதனுல் அவனுடைய உள்ளம் உருகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/127&oldid=825727" இலிருந்து மீள்விக்கப்பட்டது