பக்கம்:சித்தி வேழம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சித் தி வேழம் காம் அளிப்பது, நமக்குக் கொடுமையைச் செய்யும் அழுக்குப் பண்டம். அதைப் பெற்றுக்கொள்வதோடு மிகவும் உவகையை அடைந்து அந்த யானை தருவதோ, கமக்கு எல்லா கன்மைகளையும் அளிக்கும் கருணே! இப்படியும் நடக்குமா? இதில் வியப்பு ஒன்றும் இல்லை. உயர்ந்த சாதி ரோசாச் செடியை ஒரு தோட்டத்தில் ஒருவன். வளர்க் கிருன். அதற்கு நாற்றமுள்ள எருவைக் கொண்டுவந்து போடுகிருன். அதனை ஏற்றுக்கொண்ட அச் செடி மிகவும் மணமான மலரை அளிக்கின்றது. நான் இன்ன எரு வைத்தேன்; செடி பூத்துக் குலுங்குகிறது என்று தோட்டக் காரன் மகிழ்ச்சியுடன் சொல்கிருன் ஒரறிவுடைய செடிக்கு நமக்குப் பயன்படாத காற்றப் பொருளே அளித்தால், நேர் மாருண மணமுள்ள மலரை அது நமக்கு அளிக்கிறது. அப் படியானல், ஞானமயமான கணபதி நாம் அளிக்கும் பசு போதத்தைப் பெற்று, நமக்குக் கருணையைத் தருவதில் என்ன வியப்பு இருக்கிறது? - * - உள்ளமெனும் கூடத்துள் ஊக்கமெனும் தறி நிறுவி உறுதி யாகத் தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட் பாசக் கள்ளவினேப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும் - வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைத்துவரு விண்கள் தீர்ப்பாம். . (நினைந்து - தியானம் செய்து வருவிண்கள் - வருகிற பாவத்தின் விளைவுகளே. திர்ப்பாம் - போக்குவோமாக, ! - இது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற். புராணத்தில் வரும் பாட்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/13&oldid=825730" இலிருந்து மீள்விக்கப்பட்டது