பக்கம்:சித்தி வேழம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியும் காதம் எந்தக் காரியம் செய்தாலும் செய்யா விட்டாலும் விநாயகனேப் பூசித்து வழிபடுவதை மறக்க மாட்டாள் பாட்டி தமிழ்ப் பாட்டியாகிய ஒளவையைத்தான் சொல் கிறேன். தமிழ் தளரா நாவும் அன்பு தளரா உள்ளமும் உடைய அந்தப் பெருமாட்டி, - 'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்;-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா" - என்று விநாயகப் பெருமானே வேண்டித் தமிழ்ப் புலமை பெற்றவள் அல்லவா? - இன்று சுந்தரமூர்த்தி காயர்ை, இறைவன் ஆனயும் ஆணையும் அனுப்பத் திருக்கைலே போகிருர், அவரைத் தொடர்ந்து பரியின்மேல் பரிவுடன் சேரமான் பெருமாள் நாயனரும் போகிருர் சேரனுடன் தமிழ்ச் சுவையை அளவ. ளாவிப் பருகும் ஒளவைக்கு இச் செய்தி தெரிந்தது. “எத்தனே காலம் இந்த மண்ணுலகில் வாழ்வது! நாமும் கைலை செல்வோம்' என்ற எண்ணம் வந்தது. மனத்தினை அடக்கமாட்டாமல் அதன் போக்கில்ே செல்பவர்களுக்கு மரணம் வரும் காலம் இன்னதென்று தெரியாது. இறைவனிடம் பேரன்பு கொண்டு அவன் அருளால் மனத்தை வசப்படுத்தியவர்களுக்கு மரணம் வருங் காலம் முன்பே தெரியும். தவத்திலும் யோகத்திலும் முதிர்க் தவர்களுக்கோ, தாம் வேண்டும் போது பூவுலக வாழ்வை நீத்து விடமுடியும், - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/14&oldid=825741" இலிருந்து மீள்விக்கப்பட்டது