பக்கம்:சித்தி வேழம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தி வேழம் பழுத்த பழமாகிய ஒளவை, நெடு வழிக்கு நல்ல துணே அமைந்திருக்கிறது என்று எண்ணிச் சேர மன்னருடன் கைலே செல்ல எண்ணினுள். விநாயக பூசை செய்யும் நேரம் அது. தான் கினைத்த காரியம் முட்டின்றி முடிய வேண்டு மென்று பூசையைப் புரியத் தொடங்கிள்ை. கைலே போகும் வேகம் உந்தியது. பூசையும் வேகமாக நடந்தது. அப்போது ஒரு குரல் கேட்டது: 'ஏன் இத்தனை விரைவு' அமைதியாகப் பூசை செய். உன் விருப்பம் நிறைவேறும்” என்று ஒளவையின் காதில் விழுந்தது. சுற்று முற்றும் பார்த்தாள்: யாரும் இல்லை. விநாயகப் பெருமானே இவ்வாறு அருளின்ை என்று உணர்ந்து, அமைதியாகவே பூசையைத் தொடர்ந்து செய்தாள். பூசை முறைப்படி நிறைவேறியது. பாட்டிக்குத் திருப்தி பிறக்கவில்லை. நம் விருப்பத்தை நிறைவேற்றும் பெருந் துணேயாகக் கரிமுகக் கடவுள் இருப்பதை மறந்து அவசரப் பட்டோமே!’ என்று உருகிள்ை. அப் பெருமானுடைய திருவருளால் தனக்கு வாழ்வில் கிடைத்த கலங்களேயெல்லாம் எண்ணிப் பார்த்தாள். அருந்தமிழ்ப் புலமையும் பெரும் புகழ் கிலேமையும் அவன் வழங்கினன். குருவடிவாகி வந்து உவட்டா உபதேசம் புகட்டினன். தெவிட்டாத ஞானத் தெளிவைக் காட்டினன். ஐம்புலனை அடக்கும் உபா யத்தை அருளினன். கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, இருவினைதம்மை அறுத்து இருள் கடிந்தான். தவம் பலிக்கச் செய்தான். யோகம் நிறைவுற அருளின்ை. 'என்னே அறிவித்து எனக் கருள் செய்து, முன்னே வினையின் முதலேக் களைந்தான்.' " عي . . . . . அவை மட்டுமா? வாக்கும் மனமும் இல்லா மனேலயம் தேக்கிய அவளுடைய சிந்தை தெளிவித்தான். அருள் தரும் ஆனந்தத்தில் அழுத்தினன். அல்லல் களைந்தே அருள் வழி காட்டினன். அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/15&oldid=825742" இலிருந்து மீள்விக்கப்பட்டது