பக்கம்:சித்தி வேழம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.முவியும் காதம் 9 நெஞ்சில் கிறுத்தினன். இவ்வாறெல்லாம் தத்துவகிலேயைத் தந்து ஆட்கொண்ட விநாயகப் பிரானே மறக்கலாமா? புலமை பெறுவது எளிது; அருள் இன்பம் பெறுவது அரிது. அதனே அருளிய பெருமானுடைய கருணேயை எண்ணி எண்ணிக் கண்ணிர் ஆருகப் பெருகப் புளகம் போர்ப்ப அமர்ந்திருந்தாள். + இப்போது அவளுக்குக் கைலேயின் கினேவு மறந்தது. சேரமானேப் பற்றிய சிந்தனே ஒழிந்தது. தன்னேயே மறந்து விநாயகப் பெருமானுடைய திருவருள் இன்ப உணர்ச்சியிலே மிதந்தாள். அவள் உள்ளத்தில் அந்த இன்ப அலேகள் மோதின. அப்போது ஒரு பாட்டு எழுந்தது. கவித் திறமை படைத்தவர்கள் உள்ளம் உணர்ச்சி வசப்படும்போதெல்லாம் கவி பிறக்கும். நாம் துயரத்தில் ஆழும்போது புலம்பலும், மகிழ்ச்சியில் திளேக்கும்போது ஆ ஊ என்ற ஆரவாரமும் எழுகிறதுபோல, கருவிலே திருவுடைய கவிஞர்களிடம் கவி எழும். - - அப்போது உதயமான கவிதையே விநாயகர் அகவல் என்ற அழகிய திருப்பாட்டு. எழுபத்திரண்டு அடிகளே உடைய அப்பாட்டில் ஒளவைப் பாட்டி முதல் முதலில் விநாயகப் பெருமானுடைய திருவடியை எண்ணி, அதன் கண் பலவிசை பாடும் சிலம்பைத் தியானித்து, அவனுடைய திருவுருவம் முழுவதையும் சொல்லால் கோலம் செய்கிருள். சிதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன்அரை ஞானும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் துரமும் - அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/16&oldid=825743" இலிருந்து மீள்விக்கப்பட்டது