பக்கம்:சித்தி வேழம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சித்தி வேழம் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே!" இவ்வாறு தொடங்கி, தான் விநாயகன் அருளால் பெற்ற பேற்றையெல்லாம் சொல்லி, கடைசியில் அப்பெருமானேச் சரண் புகுகிருள் தமிழ்ப் பாட்டி. தத்துவ நிலையைத் தந்தென ஆண்ட வித்தக விநாயக, விரைகழல் சரனே! உலக வாழ்வை நீக்கும்போது இறைவனுடைய திரு வடியே சரணமென்று புகுவது அறிஞர் இயல்பு. அந்த முறைப்படியே ஒளவை பாடி நிறைவேற்றிள்ை. பாட்டு முடிந்தும் அவள் உள்ளக்கிளர்ச்சி கிற்கவில்லை. பாட்டின் கார்வை போல இன்பம் உள்ளத்தே தேங்கி நின்றது. . அப்போது விநாயகப் பெருமான் தன் துதிக்கையில்ை அப்பெருமாட்டியைத் தூக்கிக் கைலேயிலே கொண்டு சேர்த் தான். ஒளவை பாட்டால் துதிக்கை செய்து நிறைவேற்றின அளவிலே, விநாயகன் துதிக்கை அவள் விருப்பத்தை கிறிை வேற்றியது. கண்ணே விழித்துப் பார்த்தாள் ஒளவை. புதிய இடம்: புதிய தோற்றம்; எல்லாம் ம்ாசு மறுவற்ற வெள்ளி மயம். இதுதான் திருக்கைலாயம் என்று அங்குள்ள சிவகணத் தினரில் ஒருவர் சொன்னர் பாட்டி வியப்பினல் மலர்ந்த களபம் - கலவைச் சந்தனம். துகில் ஆடை - மிக மெல்லிய ஆடை, வன்ன மருங்கில் - அழகிய இடையில். எறிப்ப - வீச. பேழை - பெட்டி. கோடு - தக்தம், சிந்துரம் - சிவப்புத் திலகம். கான்ற - தொங்கிய, சொற்பதம் - சொல்லின் கிலே. துரியம் கருவி கரணம் கழன்ற நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/17&oldid=825744" இலிருந்து மீள்விக்கப்பட்டது