பக்கம்:சித்தி வேழம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியும் காதம் 11. கண்களுடன் பார்த்தாள். நாலு திசைகளையும் பார்த்தாள். என்ன சாந்தமான சூழ்நிலை! ஏதோ புதிய ஆனந்தம் தன்னைக் கரைத்துக் கொண்டது போன்ற உணர்ச்சி அல்லவா எழுகிறது? & சிறிது கின்று நிதானித்தாள். கணபதியின் கருணையால் சிறிதும் முயற்சி இல்லாமலே கைலே வங்ததை எண்ணி உருகி வழுத்தினுள். அப்போதுதான் சேரமான் பெருமாளின் நினைவு வந்தது. அவர்கள் முன்னே போயிருப்பார்களோ? இந்த ஐயத்தை அருகில் நின்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்; அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. + பாட்டி நின்ருள். சுந்தரர் வந்தார். அவர் சிவபெருமான் கினேவையன்றி வேறு ஒன்றும் இன்றி வந்தவர்; பாட்டியைக் கவனிக்கவில்லை. பின்னலே,சேரமான் பெருமாள் வந்தார். பாட்டி நிற்பதைக் கண்டு வியந்து. "எப்படி வந்தீர்கள்? காலால் நடந்தா?’ என்று கேட்டார்; அருகில் வாகனம் ஒன்றும் இல்லேயல்லவா? 'இல்லை; கையால்' என்ருள் பாட்டி. கையாலா? விளங்கவில்லையே!” 'விநாயகப் பெருமான் தம் துதிக்கையாலே என்னை இங்கே கொண்டு வந்து விட்டார். வாகனத்தில் வரும் உங்களுக்கு முன்னே நான் வந்து விட்டேன். எல்லாம் உமை மைந்தர் திருவருள் வலிமை” என்று சொல்லி ஒரு பாடலேயும் கூறினுள். - - மதுர மொழிநல் உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை முதிர நினேயவல் லார்க்குஅரி தோ? முகில் போல்முழங்கி அதிர நடந்திடும் யானேயும் காதம்; அதன்பின்வரும் குதிரையும் காதம்; கிழவியும் காதம், குலமன்னனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/18&oldid=825745" இலிருந்து மீள்விக்கப்பட்டது