பக்கம்:சித்தி வேழம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் எடுத்த வேள் 131 அடைந்தான். பல்வேறு உருவங்களே எடுத்துப் போராடினன். அவ்வளவையும் முருகன் குலேத்தான். இறுதியில் அசுர வேந்தன் ஒரு மாமுரமாகி உருவெடுத்துக் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். அப்போது முருகன் தன் வேலே விட்டான். அது முதலில் அந்தக் கடலேக் கலக்கிச் சுவறச் செய்தது. அதனுல் உள்ளே புகுந்திருந்த சூரன் மறைவின்றி வெளிப் பட்டான். இது இயற்கைக் கடலின் அழிவு. - முருகன் அவண்க் கூட்டத்தை அழித்தான். சிங்க முகன், தாருகன், பானுகோபன், அவர்கள் தலைமையில் போரிட வந்தவர்கள் யாவரும் அழிந்தனர். அறுபத்தாறு கோடிபேர் அசுரர்கள் என்ருல் அந்தக் கூட்டம் சிறியதாகவா இருக்கும் ? பெருங்கடல் போல் படர்ந்து பெருகி நின்றது. அந்தக் கடலேயும் தன் வேலால் முருகன் அழித்தான். இது உருவகக் கடலின் அழிவு. . கறங்குதிரைக் கருங்கடலும் காரவுணப் பெருங்கடலும் கலங்க. ★ அடுத்தபடி இரண்டு மலைகள் பிளந்ததைச் சொல்கிரு.ர். முருகன் கிரெளஞ்ச மலேயைப் பிளந்தான். கிரெளஞ்சம் என்பது அன்றிற் பறவைக்குப் பேர். ஒர் அசுரன் அன்றில் வடிவத்தில் இருந்த மலையாக இருந்தான். அவனுக்குக் கிரெளஞ்சாசுரன் என்று பெயர். அந்த மல்ே எப்போதும் பறந்துகொண்டே இருக்கும். மக்கள் நிரம்பியுள்ள இடத்தில் மேலிருந்து வந்து தங்கும். அதன்கீழ் அகப்பட்டுப் பல்லாயிர மக்கள் சாவார்கள். அன்றில் இணைபிரியாத அன்புக்கு உதாரணமாக விளங்குவது. அதன் உருவத்தை எடுத்துக் கொண்டவன் அசுரனுதலின் நேர்விரோதமாகப் பகையை யும் பயத்தையும் அழிவையும் வளர்த்தான். அந்த மலேயின்மேல் வேலே ஒச்சிப் பொடிப் பொடியாக்கினன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/137&oldid=825738" இலிருந்து மீள்விக்கப்பட்டது