பக்கம்:சித்தி வேழம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சித்தி வேழம் ஆயினும் கந்த புராணத்தாலும், அருணகிரியார் முதலிய அநுபூதிமான்களின் திருவாக்குக்களாலும் ஒரளவு தெரிந்து கொள்கிருேம். ஆயிரத்தெட்டுக் கோடி அண்டங்களே ஆண்டு அறுபத்தாறு கோடி அசுரர்களேத் தன் சேவீைரர்களாகக் கொண்ட மாயாவியாகிய சூரபத்மனே முப்பத்து முக்கோடி தேவர்களால் அழிக்க முடியவில்லை. எல்லோருக்கும் வரம் வழங்கி வலியராக்கும் அவர்கள் வலிமை சூரனுக்குமுன் மங்கியது. இந்திரனுடைய ஆயுதங்கள் குரனுடைய மாயத் துக்குமுன் ஒன்றும் செய்ய இயலாதவையாயின. அத்தகைய வலிமையுடைய சூரய்ன்மன முருகன் அழித்தான். வேலை வீசி அவனே மாய்த்தான். சூரசங்காரம் என்பது தேவர் களுக்கு வியப்பைத் தரும் செயல். இறைவனுக்கோ விளையாட்டு. - . . . முருகன் குரனே அழித்த வீரத் திருவிளையாட்டை அழகு படப் பரஞ்சோதி முனிவர் பாடுகிரு.ர். முருகன் ஆறுமுகம் உடையவன். அவன் ஒரே சமயத் தில் ஆறு காரியங்களே நிகழ்த்தும் வன்மை உடையவன். ஆறுமுகன் வேலே எடுத்து வீசியதால் ஆறு நிகழ்ச்சிகள் கிகழ்ந்தனவாம். மறம் என்பது வீரம், மறங்குலவு வேல் எடுத்து வீசிய குமரவேளின் திருவடிகளே வணக்கம் செய்கிருர் முனிவர். . முருகன் வேலை ஒச்சினபோது ஆறு இடங்களில் ஆறு விளேவுகள் உண்டாயின. அந்த ஆறையும் மூன்று பிரிவாக்கி ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டை அடக்கினர். முருகன் வேலே எடுத்து வீசியதால் இரண்டு கடல்கள் கலங்கினவாம்; இரண்டு மலைகள் பிளந்தனவாம்; இரண்டு தழல்கள் மூண்டனவாம். இந்த இரட்டைகளில் ஒன்று இயல்பானது: மற்ருென்று உருவகம். சுழலுகின்ற அலகளையுடைய கடல் கலங்கியது. சூர பன்மன் பலவகையில் Gur செய்து செய்து தோல்வியையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/136&oldid=825737" இலிருந்து மீள்விக்கப்பட்டது