பக்கம்:சித்தி வேழம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் எடுத்த வேள் மனிதன் எதையாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிருன். பல சமயங்களில் அவன் அதை மீட்டும் மீட்டும் நினைப்பதில்லே. அதனுல் அந்த கினேப்புச் செயலாக மாறுவதில்லை. எண்ணிய எண்ணத்தில் திண்மை இன்மை யால் செயலாக மாறி அதில் வெற்றியடையுமட்டும் அந்த எண்ணம் சிதருமல் இருப்பதில்லை. பல சமயங்களில் அவன் ஒன்று கினைக்க வேறு ஒன்று கடக்கிறது. திண்ணிய நெஞ்சத்தில் எண்ணி, அந்த எண்ணத்தைப் பலகாலும் எண்ணி உரம் ஏற்றி, செயலில் இறங்கி, தளராது முயன்று உழைப்பவர்களுக்குக்கூட எண்ணிய அளவுக்கு வெற்றி கிடைப்பதில்லை. அஞ்சுக்கு இரண்டு பழுதில்லே என்பது போல ஒரளவு வெற்றி கிடைத்தாலே போதும் என்ற கிறைவு உண்டாகி விடுகிறது. ஒரே சமயத்தில் பல வேலைகளில் ஈடு படுகிறவர்களுக்கு எதுவும் முற்றுவதில்லை. ஒரே செயலில் ஈடுபடுகிறவர்களுக்கோ எண்ணிய அளவில் குறைவாகவே ப்யன் கிடைக்கிறது. இவ்வளவும் மனிதனது ஆற்றல் சிறியது என்பதைக் காட்டுகின்றன. அற்பசக்தி உடையவன் அவன். இறைவனே எல்லாம் வல்லவன்: சர்வசக்திமான். அவன் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் இயங்கப் பண்ணுகிருன். அந்த அந்தப் பொருள்கள் தம்தம் இயல்புக்கேற்ப இயங்கும் படி ஆணே செலுத்துகிருன். அவனுடைய பேராற்றலே. அதற்குக் காரணம். வரம்பிலா ஆற்றலுடையவன் கடவுள் என்பர் பெரியோர். முருகப் பெருமானுடைய பேராற்றல் முற்றும் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பும் அறிவும் நமக்கு இல்லை, - 9 سمبر 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/135&oldid=825736" இலிருந்து மீள்விக்கப்பட்டது