பக்கம்:சித்தி வேழம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சித்தி வேழம் அப்போது இருந்த நிலையை இப்போது எடுத்துச் சொல்ல முடியாது. அப்போது நீங்கள் சற்றே உரத்த குரலில் பாடினர்கள். முருகன் திருநாமம் பாட்டில் வந்தது. அது காதில் விழவிழ மறுபடியும் எனக்குத் துணிவு பிறந்தது. காரின் வேகத்தை அதிகமாக்கினேன். அத்த்ன வேகத்தில் நான் ஒட்டுவதே இல்லே. ஆபத்திலிருந்து தப்பிவிட்டோம். அதற்குக் காரணம் உங்கள் பாட்டு. என் மனத் தளர்ச்சியை யும் உடல் தளர்ச்சியையும் அந்தப் பாட்டுப் போக்கியது என்று கூறி முடித்தார் காரோட்டி. . . . உடன் இருந்த அன்பர் ஒருவர், "எதிரே வந்த கார்க்கார ரிடம் எலியா என்று ஏதோ சொன்னீர்களே! என்று கேட்டார். - ... • - ஆமாம்; அதைக் கவனித்தீர்களா? காட்டின் கடைசிப் பகுதி வந்தபோது எதிரே ஒரு கார் வந்தது. அது காட்டின் வழிய்ே ப்ோவது. அதை ஒட்டியவனிடம் யானே இருக்கிறது என்று எச்சரித்தேன். எலியா என்பது சிங்கள மொழியில் யானையைக் குறிக்கும் சொல்” என்று அவர் விளக்கினர். நான் முருகன் திருவருளேநினைக்து உருகினேன்; அதற்கு மேலாக அருணகிரிநாதப் பெருமானுடைய அருள் வாக்கை" எண்ணி விம்மிதம் அடைந்தேன். கார் ஒட்டியிடம் பேசலா னேன்: 'முருகன் அருளால் காம் ஆபத்திலிருந்து நீங்கினுேம் என்று நீங்கள் சொன்னதுதான் உண்மை. அருணகிரி நாதர் திருவாக்கின் பெருமையை இன்று நான் உணர்ந்து கொண்டேன். ஒரு பாட்டின் உண்மைப் பொருளே இன்று. தெளிவாகத் தெரிந்து கொண்டேன்." புலவர் கிருஷ்ணப்பிள்ளை. "என்ன பாட்டு: என்று ஆவலோடு கேட்டார். - கந்தர் அலங்காரத்தைப் பாராயணம் செய்தால் இன்ன பயன் கிடைக்கும் என்று ஒரு பாடல் பாடியிருக்கிருர். அலங்காரத்தில் ஒரு பாட்டைச் சொன்னலும் வேந்தரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/25&oldid=825752" இலிருந்து மீள்விக்கப்பட்டது