பக்கம்:சித்தி வேழம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானைக்கும் கலங்கார் 17 "நாம் பார்க்கும்படி வந்திருந்தால் கார் தப்பியிருக்குமா? அருகில் ஐந்தடி தூரத்தில் காட்டுக்குள் கிளேயை ஒடித்துக் கொண்டிருந்தது ஒரு யானே. அது காரின் ஒலியைக் கேட்டுச் சாலைக்கு வந்திருந்தால் ஆபத்து நேர்ந்திருக்கும். அந்த ஒசையைக் கேட்டபோது எனக்குச் சிறிது நடுக்கம் உண்டா யிற்று. பிறகு தைரியம் பெற்று மிக்க வேகமாகக் காரை ஒட்டலானேன்.” - - "ஆகவே, உங்கள் சாமர்த்தியத்தால் காங்கள் தப்பினுேம் என்று சொல்லுங்கள்” என்றேன் நான். 'இல்லை, இல்லை; அதைத்தானே சொல்ல வருகிறேன்! யானை மரத்தை ஒடிக்கும் ஓசையைக் கேட்டவுடன் எனக்கு அச்சம் உண்டாயிற்று: கை நடுக்கமெடுத்தது. அப்போது நீங்கள் முருகனே ப் பாடிக்கொண்டிருந்தீர்கள். பாட்டை நானும் கேட்டுக்கொண்டுதான் வந்தேன். அச்சம் உண்டான போது, நீங்கள் உருக்கமாகப் பாடினரீர்கள். அதைக் கேட்டு முருகன் காப்பாற்றுவான் என்ற உறுதி உண்டாயிற்று: காரை வேகமாக ஒட்டினேன். ஆனால் சிறிது நேரங்கழித்துப் பின்னும் பெரிய ஆபத்து வந்தது.' o கேட்டுக்கொண்டிருந்த எங்கள் ஆவல் மிகுந்தது. "இந்த முறை ஆணும் பெண்ணுமாக யானைகள் வங் தன. அதை வாசனையிலிருந்து கண்டு கொள்ளலாம். அவை சேர்ந்திருக்கும்போது சிறிய தடை உண்டானலும் சும்மா விடுவதில்லை. சாலேக்கு மிகவும் அருகில் அவை இருந்ததை நான் உணர்ந்தேன். அப்போது என் கை மிகுதி யாக நடுங்கியது. இப்போது தப்புவது அரிதென்றே எண்ணிவிட்டேன். அப்போது...... کا و : . - - ஒன்றுமே எங்களுக்குத் தெரியாதே' என்று அன்பர் ஒருவர் கூறினர். தெரிந்து என்ன செய்ய முடியும்? விண் கலவரங்தான் உண்டாகும். தெரியாமல் இருந்ததே நல்லது. எனக்கு சித்-2 - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/24&oldid=825751" இலிருந்து மீள்விக்கப்பட்டது