பக்கம்:சித்தி வேழம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சித் தி வேழம் ஆல்ை இவர்களுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு புறப்பட்டு விட்டேன்." '. - - "என்ன ஆபத்து வந்தது?" என்று யாவரும் சேர்ந்து கேட்டோம். . .. "இந்தக் காடுகளில் யானைகள் மிகுதி என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவை இரவிலே சஞ்சாரம் பண்ணும்; ஒரு காட்டிலிருந்து மற்ருெரு காட்டுக்குப் போகும். அப்போது அருகில் காரில் யாராவது வந்தால் காரைக் காலாலே தள்ளி நசுக்கிவிடும். அதனால் பெரும்பாலும் இராக் காலங்களில் இந்தச் சாலே வழியே நாங்கள் காரில் போவதில்லை. அப்படிப் போக நேர்ந்தாலும் யானேகள் நடமாடுவது தெரிந்தால் அவை சாலேயைக் கடக்கு மட்டும் நெடுங்துாரத்திலேயே காரை கிறுத்தி விளக்கை அவித்து விட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருப் போம். யானைகள் போய்விட்டன என்று தெளிவாகத் தெரிந்த பிறகே காரை நகர்த்துவோம். ஏதோ துப்பறியும் கதையைக் கேட்பதுபோல கான் அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன். x "நான் காரை நாற்பது மைல், ஐம்பது மைல் வேகத்தில் ஒட்டினேன். பிறகு அறுபது, எழுபது, எண்பது என்று முடுக்கினேன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையோ?” "நாங்கள் கந்தர் அலங்காரத்தில் மூழ்கியிருந்தோம்’ என்று புலவர் கிருஷ்ணப் பிள்ளை சொன்னர். "நாங்கள் கவனித்தோம்; விரைவில் ஊருக்குப் போவ தற்காக வேகமாக ஒட்டுகிறீர்கள் என்று எண்ணினேம்" என்ருர்கள் சில அன்ப்ர்கள். . "இரண்டிடங்களில் யானே வந்தது." . . "என்ன! யானேயா? நான் பார்க்கவில்லையே!” என்றேன். - - ". . . . . . . 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/23&oldid=825750" இலிருந்து மீள்விக்கப்பட்டது