பக்கம்:சித்தி வேழம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானைக்கும் கலங்கார் 15 முருகனுடைய நினைவிலே மிதந்தோம். இரவு பத்து மணிக்கு மட்டக்களப்பு வந்து சேர்ந்தோம். அலங்காரப் பாடல்கள்ே இடையீடின்றிப் பாடி வந்தமையால் எனக்கு ஒரு விதமான இன்பக் கிளர்ச்சி உண்டாகியிருந்தது. மட்டக்களப்பு அன்பர்கள் நான் தங்க வசதியான இடம் ஒன்றைத் திட்டம் செய்திருந்தார்கள். அங்கே இறங்கிய வுடன் கை கால் கழுவிக்கொண்டு விபூதிப் பையை எடுத்துத் திருநீறு இட்டுக் கொண்டேன். சொல்லவொண்ணுத ஆனந்தம் உள்ளத்தே நிலவியது. அப்போது, காரை ஒட்டி வந்தவர் என் அருகே வந்து நெடுஞ்சாண் கிடையாகவிழுந்து வணங்கி எழுந்து, "திருநீறு வேண்டும்” என்று கையை நீட்டினர். "நான் என்ன தம்பிரான? பண்டார சந்நிதியா? என்னை ஏன் வணங்கு கிறீர்கள்?’ என்று கேட்டேன், அவர், "உங்கள் கையால் திருநீறு தாருங்கள்; அப்புறம் சொல்கிறேன்” என்ருர். நான் திருநீறு தந்துவிட்டு, "என்ன சொல்லப்போகிறீர்கள்?’ என்று கேட்டேன். "இன்று உங்களால் நாம் எல்லோரும் பிழைத்தோம்” என்ருர். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. "நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” "ஆம், முருகன் திருவருள்தான் நம்மைக் காப் பாற்றியது." - "நாம் ஒர் ஆபத்திலும் அகப்பட்டுக் கொள்ளவில்லையே! அப்படியிருக்க நீங்கள் ஏதோ பெரிய விபத்திலிருந்தும் தப்பியதுபோலப் பேசுகிறீர்களே!” "இரண்டிடங்களில் ஆபத்து நெருங்கியது” என்று அவர் சொன்னவுடன் எல்லோருமே அவரை நோக்கி, "என்ன, என்ன?’ என்று கேட்டார்கள். . . . . - "இப்படி எதாவது வரும் என்று எண்ணியே நான் பொலன்னருவாவில் தங்கி வரலாம் என்று சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/22&oldid=825749" இலிருந்து மீள்விக்கப்பட்டது