பக்கம்:சித்தி வேழம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சித்தி வேழம் நெருங்கி அடர்ந்திருக்கும். அந்தச் செறிவினிடையே கார் போகும் சாலை ஒரே கேர் கோடாகச் செல்கிறது. பொலன்னருவா வந்ததும் எங்கள் காரை ஒட்டி வந்தவர். "இரவு இங்கே தங்கி விடியற்காலையில் எழுந்து மட்டக் களப்புக்குப் போகலாமா?" என்று கேட்டார். என்னே அழைக்க வந்தவர்களுக்கு எப்படியாவது அன்று இரவே ஊர் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று ஆசை. "அங்குள்ள வர்கள், இவர்கள் வருவார்களோ வரமாட்டார்களோ என்று ஐயமுற்று வழி பார்த்திருப்பார்கள். சிரமத்தைப் பாராமல் நேரே மட்டக்களப்புக்குப் போய்விட்டால் அங்கே இளேப் பாறிக் கொள்ளலாம்” என்ருர்கள். "அப்படியே செய்ய லாமே!” என்று நான் சொன்னேன். பொலன்னருவாவில் சிற்றுண்டி அருந்தி விட்டு மறுபடியும் புறப்பட்டோம். தமிழ்ச் செய்யுட்களேயும் அவ ற்றின் நயங்களேயும் எடுத்துப் பேசி அளவளாவினுேம். கார் காட்டைக் கிழித்துக் கொண்டு ஒடிக் கொண்டிருந்தது. மெல்ல மெல்லப் பேச்சு முருகனுடைய திருவருளேப்பற்றியதாக மாறியது. அப் போது நான் சில் திருப்புகழ்ப் பாக்களப் பாடினேன். பிறகு கந்தர் அலங்காரப் பாடல்களேச் சொல்லத் தொடங் கினேன். அதற்குமுன் பாட்டும் பொருளும் பேச்சுமாக விரவி வந்தது எங்கள் உரையாடல். அலங்காரப் பாடல்களைச் சொல்லத் தொடங்கியபோது அவை யாவும் நின்றன. நான் உணர்ச்சியோடு பாடல்களே ஒன்றன் பின் ஒன்ருகச் சொல்லிக் கொண்டே வந்தேன். உடன் இருந்தவர்கள் அவற்றைக் கேட்டுக்கொண்டே வந்தார்கள். அந்த இருளி, டையே காட்டுச் செறிவினுரடே கார் படுவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. நாங்கள் அலங்காரப் பாடல்களில் உள்ளத்தைச் சிக்கவிட்டு மற்ற ஒன்றிலும் சிந்தையைப் போக்காமல் அமர்ந்திருந்தோம். - . . கார் வரவர வேகமாகப் போவது தெரிந்தது. அதைப் பற்றிச் சிந்திக்கவோ, பேசவோ, அப்போது தோன்றவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/21&oldid=825748" இலிருந்து மீள்விக்கப்பட்டது