பக்கம்:சித்தி வேழம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானைக்கும் கலங்கார் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமுறை மகா நாட்டிலே கலந்து கொள்வதற்காகப் போயிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த செய்தி இது. மகாகாட்டுக்கு இலங்கையின் கிழக்குப் பகுதியாகிய மட்டக் களப்பில் வாழும் தமிழர்களில் பலர் வந்திருந்தனர். திருக்கோணமலே என்ற சிவத்தலம் அந்தப் பகுதியில்தான் இருக்கிறது. அவர்கள் என்னே மட்டக்களப்புக்கு வந்து பேசவேண்டும் என்று அழைத்தார்கள்; ஒப்புக்கொண்டேன். மட்டக்களப்புக்குப் புறப்பட எண்ணிய அன்று அமாவாசை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீர்வேலி என்னும் இடத்தில் கந்தசுவாமி கோயில் ஒன்று உண்டு. அந்தக் கோயில் பூசகராகிய திரு இராசேந்திரக் குருக்கள் என்பவர் என்னிடம் பேரன்புடையார். அவர் வீட்டில் உணவு கொண்டு காரில் புறப்பட்டேன். என்னுடன் யாழ்ப் பாணத்துப் புலவராகிய திரு பொ. கிருஷ்ணப் பிள்ளே என்பவரும் மட்டக்களப்பு அன்பர்களும் வந்தார்கள். அன்பர் கிருஷ்ணப்பிள்ளே நன்ருகப் படித்தவர்; படித்தவர் களிடம் அன்பு கொண்டு அவர்கள் கூறுவதைக் கேட்டு இன்புறுபவர். . x . கார் போகும்போது நாங்கள் இலக்கிய சம்பந்தமான பலவற்றைப் பேசிக்கொண்டே போனேம். பகல் பதினெரு மணிக்கு நீர்வேலியிலே புறப்பட்டவர்கள் மாலே ஏழுமணி யளவுக்குப் பொலன்னருவா என்ற இடத்தை அடைந்தோம். அதுவரைக்கும் இடையே பல ஊர்களும் நகரங்களும் இருந்தன. அதற்கப்பால் பல மைல்களுக்கு , ஒரே காடு. இருமருங்கும் வானளாவிய மரங்கள் சுவர் வைத்தது போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/20&oldid=825747" இலிருந்து மீள்விக்கப்பட்டது