பக்கம்:சித்தி வேழம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரியாரின் திருவுள்ளம் கடவுள் ஒருவரானுலும் அவரைப் பல உருவங்களில் வழிபடும் வழக்குப் பாரத நாட்டில் இருந்து வருகிறது. சைவம், வைணவம் என்ற இரண்டு பெரிய ஆறுகள் சங்கமம்" ஆகின்ற பெரும் கடல் இந்து சமயம். இவற்றின் கிளேகள் பல சமயங்களாக உருவெடுத்திருக்கின்றன. சிவ பெருமான வழிபடுவோர் எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள் என்று சொல்ல இயலாது. சமயத்திற்குத் தலைவராக ஒரே கடவுளே. வழிபட்டாலும், இறைவன், உலகம், உயிர் ஆகிய வற்றின் தொடர்புகள், முத்தியின் இயல்பு என்ற கருத்துக் களில் பல வேறுபாடுகள் இருக்கும். துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், வீர சைவம் முதலிய வேறுபாடுகள் வழி படும் மூர்த்திகளின் வேறுபாட்டால் அமைந்தவை அல்ல. உயிர், உலகம், கடவுள், முத்தி ஆகியவற்றைப் பற்றிய கருத்து வேறுபாட்டால் அமைந்தவை. வழிபாட்டு முறையில் எந்த வகையைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் பலருக்கு வழிபடுகின்ற கடவுள் சிவபெருமாளுக இருப்பர். வேறு பலருக்குத் திருமாலாக இருப்பர். - சிவபெருமானத் தொழுகின்ற கூட்டத்திற்குச் சிவ பிரானேயன்றி அம்பிகை, முருகன், விநாயகர், வீரபத்திரர், பைரவர் முதலிய பல வழிபடும் மூர்த்திகள் உண்டு. அம்பிகையின் மூர்த்தங்கள் பல. முருகப் பெருமானின் கோலங்களும் பல பல. விநாயகப் பெருமானும் வ்ெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொண்ட கோலங்கள் பல உண்டு. இப்படியே திருமாலின் திரு அவதாரங்கள் பல. அந்த அந்த அவதாரத்திலும் வெவ்வேறு கோலங்கள் பக்தர்களின் வழி பாட்டுக்கு உரியனவாக இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/27&oldid=825754" இலிருந்து மீள்விக்கப்பட்டது