பக்கம்:சித்தி வேழம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 த்ெதி வேழம் இருந்து வருகின்றன என்று திருமுருகாற்றுப்படையில்ை நாம் அறிகிருேம். பரிபாடல் என்ற நூலில் மதுரை மாநகரத்தில் வாழ்ந்த மக்கள் திருப்பரங் குன்றத்தில் எழுங் தருளியிருக்கும் முருகப் பெருமானிடத்தில் பேரன்பு வைத்து வழிபட்டுத் தத்தமக்கு வேண்டிய நலங்களைப் பெற்ருர்கள் என்று தெரியவருகிறது. - பிற்காலத்திலும் முருகப்பெருமான வழிபட்ட அடியார் கள் பலர் இந்த நாட்டில் வாழ்ந்திருக்கிருர்கள். அவர்கள் பாடிய பாடல்கள் பல. அவர்களுள் முருகப்பெருமானின் திருவருளில் ஈடுபட்டு மிகமிக விரிவாகத் திருப்புகழ் என்ற பெரிய பாக்கடல் வழங்கியவர் அருணகிரிநாதர். அவருடைய திருவாக்கினல் முருகப் பெருமானின் 'வீரச் செயல்களும், புகழும், அருளும், சிறப்பும் விளங்குகின்றன. அவை: அல்லாமல் நம்முடைய பழைய பண்பாட்டின் வகைகள், பல துறைகளாக விரிந்த சமய நுட்பங்கள் ஆகியவையும் அவர் வாக்கில் விளங்குகின்றன. அருணகிரிநாதர் பெரிய தமிழ்ப் புலவர்; முருகன் அடியார்; ஞானி; யோகி; பக்தியைச் சிறப் பாகப் பாராட்டினவர்; எல்லாவற்றுக்கும் மேலாகப் பெரிய சமரசவாதி. - அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் மிக விரிந்தது. அவர் பதிருையிரம் திருப்புகழ் பாடினர் என்று மார்க்க சகாயதேவர் சொல்கிருர். அவை முழுவதும் இப்பொழுது கிடைக்கவில்லை. ஆயிரத்து முந்துற்றுச் சொச்சம் பாடல் களே கிடைத்திருக்கின்றன. கிடைத்தவற்றைப் பார்த் தாலேயே அருணகிரிநாத சுவாமிகளின் சமரச மனோபாவம், விரிந்த உள்ளப்பாங்கு, நன்கு தெரியும். அவர் தொடாத கதை இல்லை. பாடாத பொருள் இல்லே. சொல்லாத நெறி ஞான நெறியைப்பற்றிச் சில பாடல்களில் விரிவாகச் சொல்வார். யோகத்தின் முறைகளைச் சில பாடல்களில் சிறப் பாகப் பாடுவார். பக்தியின் பெருமையைப் பல பாட்டுக்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/28&oldid=825755" இலிருந்து மீள்விக்கப்பட்டது