பக்கம்:சித்தி வேழம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரியாரின் திருவுள்ளம் 23 விரித்து உரைப்பார். முருகப் பெருமானின் அழகை அகக் கண் கொண்டு ப்ார்த்த அநுபவத்தை இனிமையாக எடுத்துச் சொல்வார். அவன் தத்துவத்தைச் சொல்வார். வீரப் பிரதாப விளையாடல்களைப் பல பல பாட்டுக்களில் எடுத்து விரிப்பார். அவன் கருனேயின் பெருமையை, வள்ளி அம்மையின் இயல்பை, வள்ளியெம் ப்ெருமாட்டி தினேப்புனம் காத்த மலேச்சாரலுக்கு ஓடிவந்து அவள்பால் முருகன் கொண்ட காதலின் சிறப்பை அருணகிரிநாத சுவாமிகள் சொல்வது போல யாராலும் சொல்ல முடியாது. இவை மாத்திரமா? சிவபெருமானின் கருணேச் செயல் கள் எல்லாம் அங்கே வரும். அப்பெருமானப்பற்றிய நாமங்கள் எல்லாம் அருச்சனையாக விரிந்திருக்கும். திருமாலின் கருனேயும், அவதாரக் கதைகளும், இராமபிரான் வரலாற்றின் பகுதிகளும், கண்ணபிரானின் கோலாகல விளேயாடல்களும் அவர் பாடல்களில் ஆங்காங்கே காட்சி தரும். அம்பிகை, விநாயகப்பெருமான், திருஞான சம்பந்தர் முதலியோரின் பெருமைகளையும் திருப்புகழில் காணலாம். - உலகத்தில் மக்கள் பிறந்து பலவகையான துன்பங்களே அடைந்து வாட்டமுறுவதைப் பல பல காட்சிகளாகச் சித்திரித்திருக்கிருர். மனிதன் அடைகின்ற துன்பங்களுக் கெல்லாம் மூலமான துன்பம் பிறப்பு என்பது. அந்தப் பிறப்புக்கு மூல காரணமாக இருக்கும் தீய குணங்கள் பல. ஆனலும் பெரும்பான்மையான மக்கள் காமம் என்ற கோப் வாய்ப்பட்டே துன்புறுகின்றனர். அதல்ை அருணகிரிநாத சுவாமிகள் உலகியலேப் பற்றிப் பாடுகின்ற பாடல்களில் காமத்தைப் பற்றிய பேச்சு மிகுதியாக இருக்கும். மங்கையர் மையலில் உழன்று படும் துன்பங்கள் மிக விரிவாகக் காணப் படும். அவற்றைக் கண்டு, அருணகிரியார் அத்தகைய அநுபவத்தைப் பெற்றுப் பின்பு அறிவு தெளிந்து, இறைவ னிடத்தில் ஈடுபட்டார் என்று சில ஆராய்ச்சிக்காரர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/29&oldid=825756" இலிருந்து மீள்விக்கப்பட்டது