பக்கம்:சித்தி வேழம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சித்தி வேழம் சொல்வார்கள். அப்படிச் சொல்வது முறையாகத் தோன்ற வில்லை. அருணகிரியார் தம் பாடல்களில் சொல்லியிருக் கின்ற அத்தனை திய அநுபவங்களேயும் தொகுத்துப் பார்த் தால், ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அநுபவிக்கக் கூடிய அநுபவங்களாகத் தோன்ரு. அவர் வரிசை வரிசையாகச் சொல்கின்ற அத்தனே தீய அநுபவங்களேயும் பல பல பிறவிகள் எடுத்தால்தான் அநுபவிக்க முடியும், அப்படியானல் அருணகிரியார் எதற்காக அவற்றை எடுத்துச் சொன்னர் என்ற கேள்வி எழலாம். உலகத்தில் மக்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு, அவர்கள் வாயில்லாப் பூச்சிகளாக இருக்கிருர்களே என்று இரங்கி, அவர்கள் எம் பெருமானிடத்தில் விண்ணப்பம் செய்வதற்காகப் பல விண்ணப்பப் பிரதிகளாக அவற்றைக் கொடுத்திருக்கிரு.ர். உலகத்தை எல்லாம் தாமாகப் பார்க்கிற உயர்ந்த அநுபவ கிலையில் வாழ்ந்த ஞானி அவர். தன் குழந்தையின் நோய்க்காக மருந்து உண்ணும் தாய் போன்ற கருனே உள்ளம் படைத்தவராதலின் உலகத்தாரின் துன்பங்களைத் தாம் ஏறட்டுக்கொண்டு அவர்களுக்காகப் பாடிய பாடல்கள் அவை என்றே கொள்ளவேண்டும். இப்பொழுது உலகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களைத் தாக்கி வாட்டி வதைத்து உருக்குலேக்கும் கோய் காமம் என்ற பெருநோய். ஆதலினல் அந்நோயைப் பற்றிய வருணனைகள் அவர் பாட்டில் மிகுதியாகக் காணப்படுகின்றன.' - பொதுவாக, சைவசித்தாந்தம், அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்ற சமய வேறுபாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு சமயத்திலும் உள்ள பெரியார்கள் ஒவ்வொரு நெறியை விரித்து உரைத்திருக்கிருர்கள். ஞானசம்பந்தப் பெருமான் முதலிய நாயன்மார்கள் எல்லோரும் சிவனடியார் கள். ஆலுைம் ஒவ்வொருவருடைய முறையும் வெவ்வேறு வகை. ஞானசம்பந்தப் பெருமான்ட்சத்புத்திர மார்க்கத்தில் இறைவனே அடைந்தார் என்றும், அப்பர் சுவாமிகள் தாச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/30&oldid=825758" இலிருந்து மீள்விக்கப்பட்டது