பக்கம்:சித்தி வேழம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரியாரின் திருவுள்ளம் 25 மார்க்கத்தில் இறைவன் அருளேப் பெற்ருர் என்றும், சுந்தர மூர்த்தி சுவாமிகள் சகமார்க்கத்திலும், மாணிக்கவாசகர் சன்மார்க்க நெறியிலும் சென்று இறைவன் அருளேப் பெற்ருர்கள் என்றும் கூறுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு பெரியாரின் வாழ்க்கை முறையையும் ஆராய்ந்து பார்த்தோ மாயின், அவர்கள் எல்லோருக்கும் அடிப்படையாக அமைந் துள்ள சமயக் கொள்கைகள் இருந்தாலும் அவரவர்களுக்குச் சொந்த அநுபவமாக அமைந்த சிறப்பான கொள்கைகளேயும் பார்க்கலாம். இதைத்தான் மேல் நாட்டார் அவர்களுடைய தத்துவ முறை (Philosophy) என்று கூறுவர். அருணகிரிநாதப் பெருமானின் திருவாக்கை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் அவருடைய திருவுள்ளத்தின் இயல்பு என்ன என்பது புலன் ஆகும். முருகன் அடியார் அவர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆளுல் தம் தம் கடவுளே உயர்த்திப் பாடுகின்ற மற்ற அடியார்கள் ஏதேனும் ஒர் இடத்தில் தங்கள் உபாசனமூர்த்தி அல்லாத கடவுளைப் புறக்கணிக்கின்ற முறையில் பாடியிருக்கக் கூடும். அருணகிரி, நாதர் அத்தகையவர்களேச் சேர்ந்தவர் அல்லர். தம்முடைய பேரன்புக்குரிய முருகனைப் போற்றிப் பாடுவதோடு மற்றத் தெய்வங்களேயும் உயர்த்திப் பாடி, அந்தத் தெய்வங்களுக்கு முருகன் இன்ன உறவு என்பதைச் சொல்வதன் மூலம் முருகனின் சிறப்பைப் பின்னும் உயர்த்திய பெரியார் அவர். சிவபெருமானுடைய புகழாகவே சொல்லிக் கடைசியில் முருகனே அப் பெருமானின் மகனே என்று விளிப்பார். திருமாலின் சிறப்பாகவே பாட்டு முழுவதும் சொல்லிக் கொண்டு வந்துவிட்டுக் கடைசியில் அவர் மருகோனே என்று முருகனே உணர்த்துவார். இதுதான் அவரது சமரச நெறியும், முறுகிய பக்தியும் இணைந்து உருவெடுக்கும் முறை. யோக நெறிகளைப் பற்றியும், ஞானவிசாரத்தைப் பற்றி யும், பக்திப் பண்பாட்டைப் பற்றியும், கர்மயோகச் சிறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/31&oldid=825759" இலிருந்து மீள்விக்கப்பட்டது