பக்கம்:சித்தி வேழம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சித் தி வே மும் பைப் பற்றியும் பலபல பாடல்களில் அவர் தம் கருத்தை வெளியிட்டிருக்கிருர். அப்படியானல் அவர் ஞானியா, யோகியா, பக்தரா என்ற ஐயம் நமக்கு எழும். அவரது தத்துவ நெறி எது என்ற பெரிய கேள்வி நம் முன்னல் நிற்கிறது. - - 1 - பெரும்பாலும் உலகத்தினர் அருணகிரிநாதர் கடைப் பிடித்த வழி பக்தி" என்று சொல்வர். பல தலங்களுக்குச் சென்று, ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானே வழிபட்டுத் திருப்புகழ் என்ற அற்புதமான நூலே அவர் நமக்கு ஆக்கித் தந்திருக்கிருர். இந்த நெறி பக்தி நெறி என்று பொதுவாக நாமும் ஒப்புக் கொள்வோம். அருண கிரியார் தலைமையான பக்தர். ஆயினும் அவருக்கு ஞானம் தெரியும்; யோகம் தெரியும்; சரியா கிரியா மார்க்கங்கள் எல்லாம் நன்ருகத் தெரிந்தவர் அவர். அவரது பக்தி, ஞானத்திற்குப் புறம்பானது அன்று; யோகத்திற்குப் புறம்பானதும் அன்று. அது பெரிய மரமாக வளர்ந்து, தனக்குள் மற்ற எல்லா நெறிகளையும் கிளேகளாகக் கொண்டது. பக்தி யோகம் என்று ஒன்றைச் சொல்வார்கள். ஞானம் என்ற முடிவை அடைவதற்குப் பக்தி வழியாக இருப்பதாக வேதாந்த நூல்கள் பேசுகின்றன. அருணகிரியார் திருவுள்ளத்தில் கிளர்ந்து எழுந்த பக்தி அத்தகையது அன்று. பக்தி வழியாக இருக்க, அதற்கு முடிவாகிய ஒன்று தலைப்பட்டதும் அந்த வழி நழுவி விடும். அத்தகையது அன்று இது. ஞானம் 'இல்லாமல் முத்தி கிடைக்காது என்று வேதாந்திகள் சொல்வார்கள். அந்த ஞானம் பக்தி இல்லாவிட்டால் விளையாது. பக்தியாகிய கனிவும், கர்மம் என்ற சாறும் கலந்தால்தான் ஞானக்கனி கிடைக்கும். பச்சை நிறமுள்ள காப் கனிவு கண்டவுடன் மஞ்சள் நிறமாகி, உள்ளேயுள்ள புளிப்புச்சுவையுள்ள சாறு இனிமையை அடைவதுபோல, பக்திக் கனிவினுல் ஞானம் பழுத்து, கர்மம் என்ற சாறு சுவையுள்ளதாக மாறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/32&oldid=825760" இலிருந்து மீள்விக்கப்பட்டது