பக்கம்:சித்தி வேழம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரியாரின் திருவுள்ளம் 27 அப்போது கனிந்த கனியே இன்ப அநுபவம். பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் என்று சொல்லும் வழிகள் பெரியோர்களால் அதுசரிக்கப்பெற்று வருகின்றன. அருணகிரிநாதப் பெருமான் பக்தியோகியா? இல்லை. அதைப் பக்தி நெறி என்று சொல்லலாம். பக்தி நெறி என்பது யாது? - - - . 'முத்திநெறி அறியாந மூர்க்கரொடு முயல்வேனப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனே ஆண்ட அத்தன்நமக் கருளியவா ருர்பெறுவார் அச்சோவே!" என்று மாணிக்கவாசகர் பேசுகின்ருர். மாணிக்கவாசகப் பெருமான் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளில், ஞானத்தின் உச்சியில் நின்றவர் என்று சைவ சித்தாந்திக்ள் சொல்வார்கள். ஞானப் பிழம்பாகிய மாணிக்க வாசக சுவாமிகள் இறைவன் தமக்குப் பக்தி, நெறியை அறிவித்தான் என்று சொல்லுகிருர். அவரும் பக்தர்தாம். அவர் பக்தி வேறு பக்தியோகம் வேறு. மாணிக்கவாசகர் உலகியலில் ஈடுபட்டு அமைச்சராகப் பணியாற்றிவந்தவர். அவரை எம்பெருமான் தடுத்தாட்கொண்டார். மனம் உருகி இறைவன் இன்ப அநுபவத்தைப் படிப்படியாகச் சுவைத்தார். ஒரே அடியாக ஒன்றை விழுங்குவதைக் காட்டிலும் சிறிது சிறிதாக நுகர்ந்தால் சுவையும் நீளும், அப்படி எம்பெரு மானின் திருவருள் அநுபவ இன்பத்தை மெல்ல மெல்ல உண்டவர். அதல்ை மற்றவர்கள் அதுபவிக்கின்ற அது பவத்தைக் காட்டிலும் மாணிக்கவாசருக்கு அநுபவம் நீண்ட தாகவும், உயர்ந்ததாகவும், சிறந்ததாகவும் அமைந்தது. ஒரு வகையில் அருணகிரிநாத சுவாமிகளின் திரு வுள்ளத்தை மாணிக்கவாசகர் திருவுள்ளமாகச் சொல்லலாம். ஆனல் மாணிக்கவாசகர் அருணகிரிநாத சுவாமிகளைப் போல உலகியலே மிக மிக விரிவாகக் கண்டார் இல்லே. அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/33&oldid=825761" இலிருந்து மீள்விக்கப்பட்டது