பக்கம்:சித்தி வேழம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரியாரின் திருவுள்ளம் 29 எனச் சொல்லுகின்ற யோக முறைகளே அருணகிரியார் தெரிந்து கொண்டிருந்தார். அவாக்களே அறுத்து, இந்திரிய நிக்கிரகம் செய்து, உணவை ஒடுக்கி, விர்தங்களேக் கடைப் பிடித்து, ஞான நெறியில் நிற்பது அவருக்குத் தெரியும். ஆல்ை அவை அத்தனையும் எல்லோருக்கும் கை வந்த நெறிகள் அல்ல. உலகிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களில் சிலருக்கே யோகம் செய்ய முடியும். பல லட்சக் கணக்கான மக்களுக்குள்ளே யாரேனும் ஒருவர் இந்திரிய நிக்கிரகம் செய்து ஞானத்தை அடையலாம். ஆனல் முருகப் பெருமானின் திரு அவதாரம், மேல் சபைக்குப் பிரதிநிதி பொறுக்குகின்ற தேர்தல் அல்ல. உலகில் வாழ்கின்ற பெரும்பாலான மக்களுக்கு அருளேப் பரப்பவேண்டுமென்று கருதியே முருகன் அவதாரம் செய்தான். ஆதலால் பெரும் பாலான மக்களுக்குப் பயன்படுகிற நெறி எதுவோ அந்த நெறியில் உண்மையான கம்பிக்கையையும், பற்றையும் உண்டாக்க வேண்டுமென்பது அருணகிரியாரின் திருவுள்ளம். முருகப்பெருமானே மிக மிக எளியவகை அவர் காட்டுகிருர், எத்தகைய வாழ்க்கையை உலகத்தில் அதுபவித்துக் கொண் டிருப்பவனாக இருந்தாலும் முருகனிடத்தில் பக்தி கொண்டு நெஞ்சு நெகிழுமானல் அந்த நெகிழ்ச்சி அவனைப் படிப்படி யாக ஏற்றி நிரதிசய ஆனந்தத்தைப் பெறச் செய்யும் என் பது அவர் திருவுள்ளத்தில்கொண்ட நெறி; தம் பாடல்களில் எடுத்துக் காட்டும் சிறப்பான நெறியும் அதுவே. பக்தி என்பது ஒரு படி. அதற்கு அப்பாலே இந்திரிய கிக்கிரகம் என்பது ஒரு படி அதற்கும் பிறகு சமநிலை என்பது ஒரு படி அதற்கு அப்பால் அருள் பதிதல் என்பது ஒரு படி, பின்பு இன்பத்தைப் பெறுதல் என்பது கடைசிப் படி என்று விளக்கிக் காட்டுகின்ற நூல்கள் பல இருக் கின்றன. அருணகிரிநாதப் பெருமான் சொல்வது என்ன? முருகப் பெருமானின் கினப்பைக் கொள்வது அன்பின் முதல் படி அந்த நினைவு தோற்றிய பிறகு நெகிழ்ச்சி பெறுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/35&oldid=825763" இலிருந்து மீள்விக்கப்பட்டது