பக்கம்:சித்தி வேழம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சித்தி வேழம் அன்பின் இரண்டாவது கிலே. நெகிழ்ச்சி பெற்ற பிறகு உலகத்திலுள்ள ஆசை அத்தனையும் நழுவுவது அடுத்த கிலே. நழுவின பிறகு எம்பெருமான் திருவருள் படிவது தொடர்ந்து வரும் அநுபவம். அதன் பயனுகப் பேரின்பம் பெறும் கிலே - அன்பு பழுக்கும் கிலே - வரும். முதலில் தோற்றிய அன்பே வெவ்வேறு பக்குவத்தில் தழைத்து வளர்ந்து முதிர்ந்த கிலேயில் பேரின்ப அதுபவமாகிறது. இது அருணகிரி நாதருக்கே அமைந்த நெறி அன்று. திருமூலர் இதைச் சொல்கிருர். - - - 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் - அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே' என்பது திருமந்திரம். அன்பு என்பது வழி, சிவம் என்பது அவ்வழியினுடைய முடிவில் உள்ள லட்சியம் என்று சொல்வது பிழை. அன்பு என்ற ஒரு கிலேயே சிவமாக மாறு கிறதென்ற கருத்து, திருமூலர் வாக்கிலிருந்து புலப்படு கிறது. - -- - முதலில் எம்பெருமானின் நினைவு உள்ளத்தில் தோற்றினால் அது குறுகிய வழியாக முதலில் தோன்றி, வர வர அதுவே விரிந்து பெரிய வழியாக வளர்கிறது. பெரிய மலேயில் சிறிய சிறிய ஊற்றுக்கால்களாகத் தோன்றிய நீர் மிகக் குறுகிய அளவோடு புறப்படுகிறது. அந்த மலையில் ஊற்றெடுத்து இழிந்து வந்த நீர் மெல்ல மெல்ல ஒன்று கூடி ஒரு கால்வாய் ஆகிப் பின்பு வேகம் பெற்று அருவி ஆகிறது. அந்த அருவி கடகடவென்று நிலப்பரப்புக்கு வந்த பிற்கு தொடர்ந்து படர்ந்து விரிந்து செல்கிறது. விரிந்த கால்வாய் ஆருகப் பெருகிப் பல வயல்களைக் கொழிக்கச் செய்கிறது. கடைசியில் அது கடலோடு கலந்து விடுகிறது. மலையில் தோன்றிய ஊற்று வேறு கீழே வந்த சிற்ருறு வேறு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/36&oldid=825764" இலிருந்து மீள்விக்கப்பட்டது