பக்கம்:சித்தி வேழம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரியாரின் திருவுள்ளம் 31 பேராறு வேறு, கட்லோடு கலந்த ஆறு வேறு என்று சொல்ல முடியுமா? அங்கே தோன்றிய ஊற்று நீர் கடலோடு கலக்கும்போதும் இருக்கிறது. ஆனல் பல்வேறு நிலையில் பல்வேறு விளைவுகளே உண்டாக்குகிறது. அருணகிரியார் கூறும் பக்திக்கு இதைத்தான் உதாரணமாகச் சொல்லலாம். தோன்றும்போது கெஞ்சில் நினைவாகத் தோன்றி, முடியும் போது இரண்டற்ற இன்பமயமாக ஆவது அருணகிரியார் காட்டும்பக்தி நெறி. இதை அவருடைய பாடல்கள் பலவற்றி லிருந்து உணரலாம். . பத்தித் துறையிழிந்து ஆனந்தவாரி ப்டிவதனுல் புத்தித் தரங்கம் தெளிவது என்ருே? - என்று அலங்காரத்தில் பாடுகிருர் பக்தித் துறையில் இழிந்தால் ஆனந்தம் என்ற கடலில் கலந்து கொள்ளலாம் என்பது அவர் கருத்து. பக்தித் துறை யாது? அது எங்கே தொடங்குகிறது? அது எப்படி விரிகிறது? பக்தி என்பது உணர்ச்சி, நம் உள்ளத்தில் தோன்றுகின்ற உணர்ச்சி வகைகளுக்குக் கொழுந்தாக இருக்கிறது. அது. தோன்றும் போது அது சிறியதாகத் தோன்றும். அதாவது ஒருவனுக்கு முருகன்பால் அன்பு பிறந்தால் நினைப்பாகத் தோன்றும். அவன் முருகன் படத்தைப் பார்ப்பான். பின்பு அவனது கோயிலுக்குச் செல்வான். அவன் பாட்டைக் காதினுல் கேட்டான். வரலாற்றைப் படித்து இன்புறுவான். பின்பு அதனுடைய தத்துவத்தை நன்கு உணர்ந்து தியானத்தில் அமர்ந்துவிடுவான். கண்ணுலே கண்ட முருகன் கோலத் தையும் காதாலே கேட்ட முருகன் உபதேசத்தையும் தனியாக இருக்கும்போது தன் நெஞ்சிலே புதையும்படி சிந்திக்கத் தொடங்குவான். அப்படித் தன் நெஞ்சிலே புதைக்கப் புகும்போது புறத்தில் தோற்றுகின்ற பொருள்கள் அத்தனையையும் களைந்துவிட்டு, தன் நெஞ்சில் வைத்துக் கொண்ட தோற்றத்தை நிலை நிறுத்தப் பார்ப்பான். முயற்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/37&oldid=825765" இலிருந்து மீள்விக்கப்பட்டது